Connect with us

Cinema News

கிள்ளிக் கொடுத்த ஷாருக்கான்!.. அள்ளிக் கொடுத்த அன்னபூரணி!.. நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?..

ஷாருக்கானின் ஜவான் படம் 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட நிலையில், நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட சம்பளத்துக்கு நிகராக லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள அன்னபூரணி படத்திற்கும் நடிகை நயன்தாரா சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நடிகை நயன்தாரா சுமாராக ஒரு படத்துக்கு 8 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடித்த ஜவான் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு 11 கோடி சம்பளமும் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் இன்னொரு ஹீரோயினாக நடித்து அசத்திய தீபிகா படுகோனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன.

இதையும் படிங்க: சும்மா பரபரக்குதே!.. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் எல்லாம் ஓரம் போங்கப்பா.. பார்க்கிங் பட சீனை பார்த்தீங்களா?

இந்நிலையில், படத்தின் பட்ஜெட்டே 10 கோடி கூட இருக்குமா? என்கிற சந்தேகம் கொடுக்கிற நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்துக்கும் லேடி சூப்பர்ஸ்டாருக்கு 10 கோடி ரூபாய் சம்பளத்தை தொக்காக தூக்கி அந்த படத்தின் தயாரிப்பாளர் கொடுத்து இருப்பதாக அட்டகாசமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிசம்பர் 1ம் தேதி தமிழில் பல படங்கள் போட்டியாக வெளியாக உள்ள நிலையில், நயன்தாராவின் அன்னபூரணி படம் நயன்தாரா வாங்கி உள்ள சம்பளம் அளவுக்காவது சம்பாதிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் சந்தானம் நடித்து வெளியான 80ஸ் பில்டப் படம் முதல் காட்சி கூட ஹவுஸ்ஃபுல் ஆகாத நிலையில், முதல் 2 நாளில் 2 கோடி வசூல் செய்ததுடன் அவ்வளவு தான் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பாகுபலியை போட்டு பொளக்க ரெடியாகிட்டாரா சூர்யா!.. கங்குவா படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா!..

நிலேஷ் கிருஷ்ணா சர்ச்சைக்குரிய டாப்பிக்கை தொட்டிருந்தாலும் அட்லீ அளவுக்கு மேக்கிங் செய்திருந்தால் படம் பாஸ் ஆகும் என தெரிகிறது. ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் மற்றும் ரன்பீர் கபூரின் அனிமல் படத்துக்குத் தான் அதிக வரவேற்பு இருக்கும் என்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top