ராவுத்தர் – விஜயகாந்த் பிரிவு துவங்கிய புள்ளி அதுதான்!.. கடைசிவரை சேராமல் போன சோகம்..

Published on: December 2, 2023
viajaykanth
---Advertisement---

Actor Viajyakanth: விஜய்காந்த் தமிழ் சினிமாவின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர். இவரின் நல்ல குணத்திற்கே பல மக்கள் இவரின் மேல் பிரியமுடன் இருந்தனர். இவர் தமிழில் இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, செந்தூரப்பூவே போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவரின் திரைப்படங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன. மேலும் பல்வேறு குணச்சித்திரை வேடங்களிலும் தனது நடிப்பினை சிறப்பாக வெளிக்காட்டினார்.

இதையும் வாசிங்க:அண்ணா!.. இனி எப்ப வந்து உதைப்பீங்க!.. தம்பி அழுறேன் வாங்க.. விஜயகாந்துக்காக உருகிய மன்சூர் அலி கான்

பின் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தினால் அரசியலிலும் ஈடுபட்டார். ஆனால் பின் தனது உடல்நிலை சரிவர ஒத்துழைக்காததால் அரசியலில் அவரால் ஈடுகட்ட முடியவில்லை. பின் அவரது மனைவியே அந்த பொறுப்பை பார்த்து கொண்டார். ஆனால் இதே மனைவிதான் ஒரு காலத்தில் இவருக்கும் இவரது நேருங்கிய நண்பரான ராவுத்தருக்கும் இடையே இருந்த நட்பு பிரிய காரணமானாராம்.

தனது நட்புக்காக கடைசிவரை திருமணமே செய்து கொள்ளாதவர் ராவுத்தர். இவர் தயாரிப்பாளரும் கூட. விஜயகாந்தின் செலவு மொத்தத்தையும் இவர்தான் பார்த்துள்ளாராம். விஜயகாந்த் எந்தவொரு படத்தில் சம்பளம் வாங்கினாலும் ராவுத்தர்தான் அதனை பெற்று கொள்வாராம்.

இதையும் வாசிங்க:கார்த்தி இப்படி இன்னொரு படம் நடிப்பரா?!.. சிவக்குமார் செய்வது சரியா?!.. வச்சு வாங்கும் கஞ்சா கருப்பு!..

ஆனால் விஜயகாந்துக்கு திருமணம் ஆனபின் இவர்கள் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அதிகம் செலவு செய்வாராம். அப்போது ஒரு நாள் விஜயகாந்திடம் ராவுத்தர் இதை பற்றி பேசியுள்ளார். விஜய் செலவு அதிகமாக வருகிறது என கூறினாராம். இந்த நிகழ்வு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாக காரணமாயிருந்ததாம்.

பின் ராவுத்தர் விஜயகாந்திடம் இனி உனது படத்தில் கிடைக்கும் சம்பளத்தை நீயே கவனித்து கொள் என்று கூறிவிட்டாராம். இப்படி எந்த வித பிரச்சினையும் இல்லாமல் போன விஜயகாந்த் ராவுத்தர் நட்பு விஜயகாந்தின் திருமணத்தால் பல இன்னல்களையும் சந்தித்தது.

அதன்பின் ராவுத்தர் விஜயகாந்தை பிரிந்துவிட்டார். விஜயகாந்த் தனியாக பட நிறுவனம் துவங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வந்தார். ஒருகட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராவுத்தர் இறந்தும் போனார்.

இதையும் வாசிங்க:தன் ரசிகர்களுக்காக பலரிடமும் மன்னிப்பு கேட்ட தல அஜித்!. தளபதி இவர்கிட்ட கத்துக்கணும்..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.