என்ன அமல் டேவிஸ்!.. சச்சின் இல்லாத நேரம் பார்த்து ரீனுவுக்கு ரூட் விடுறியா.. காண்டான ஃபேன்ஸ்!..

கிரிஷ் ஏடி இயக்கத்தில் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் தெலுங்கு, தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வசூலில் 100 கோடியை தாண்டியது. இந்த படத்தில் ஹீரோவாக மலையாள நடிகர் நஸ்லென் நடித்திருந்தார். ஹீரோயினாக மமிதா பைஜு நடித்திருந்தார்.
இருவரது கெமிஸ்ட்ரி படத்தில் பக்காவாக வொர்க்கவுட் ஆனதை விட சச்சின் மற்றும் அவனது நண்பன் அமல் டேவிஸின் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க்கவுட் ஆனது தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற காரணமே என ரசிகர்கள் நட்பை பாராட்டி வந்தனர்.
இதையும் படிங்க: ரஜினி என்ன அடிப்பாருனு யாரும் சொல்லல! ஸ்பாட்டில் நடந்த திகில் சம்பவம்! நடிகை சொன்ன சீக்ரெட்
சச்சின் லண்டன் போன கேப்பில் தற்போது அமல் டேவிஸ் ரீனுவை கரெக்ட் பண்ணிட்டானே படுபாவி நண்பனுக்கே துரோகம் செய்றியா என ரசிகர்கள் அமல் டேவிஸ் கதாபாத்திரத்தில் நடித்த சங்கீத் பிரதாப் மற்றும் ரீனுவாக நடித்த மமிதா பைஜு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் நெருக்கமாக காதில் குசுகுசுவென பேசுவது, அமல் டேவிஸின் கன்னத்தை மமிதா பைஜு பிடித்து விளையாடுவது போன்ற வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி சச்சினாக நடித்த நஸ்லென் ரசிகர்களை காண்டாக்கி உள்ளது.
படத்தில் எந்தளவுக்கு நண்பர்களாக இருந்தார்களோ அதே போல நிஜத்திலும் ஒரு டீமாகவே அவர்கள் தொடர்ந்து சுற்றி வருகின்றனர். அடுத்த ஆண்டு பிரேமலு 2 திரைப்படம் வெளியாக போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், தொடர்ந்து அதே டீம் ஒன்றாக பயணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கில்லி படத்துல திரிஷா இல்லை நான்தான் நடிக்க வேண்டியது!.. தேவையில்லா சகவாசத்தால் மிஸ் பண்ணிட்டேன்!..
மமிதா பைஜு மலையாளத்தில் இருந்து தமிழில் சூர்யாவின் வணங்கான் படத்தின் மூலம் வர நினைத்தார். ஆனால், அந்த படத்தில் இருந்து சூர்யா வெளியான நிலையில், மமிதா பைஜு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட நடிகைகளும் விலகி விட்டனர்.
தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ரெபல் படத்தின் மூலம் மமிதா பைஜு அறிமுகமானார். அந்த படம் ரசிகர்களை கவராமல் படுதோல்வியை சந்தித்தது.
#MamithaBaiju ????????????????????????
— GetsCinema (@GetsCinema) April 21, 2024