ஆடு ஜீவிதம் படத்தின் ரியல் கலெக்ஷன் இதுதான்!.. பிரித்விராஜ் வெளியிட்ட பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..
ஆடுஜீவிதம் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அந்தப் படத்தின் ஹீரோ பிரித்திவிராஜ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் முதல் நாளில் இத்தனை கோடி வசூலை அந்த படம் ஈட்டியதா என மலையாள திரையுலகமே மலைத்துப்போய் பார்த்து வருகிறது.
டைரக்டர் பிளஸ்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ், அமலாபால் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் மார்ச் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியானது. மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி உருவான படம்தான் இது.
இதையும் படிங்க: நடிகர்களின் 25வது திரைப்படங்கள்.. யாருக்கு வெற்றி?.. யாருக்கு தோல்வி?.. வாங்க பார்ப்போம்!..
உலகம் முழுவதும் 1724 ஸ்கிரீன்களில் ஆடு ஜீவிதம் திரைப்படம் நேற்று வெளியானது. அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் வெளியான பின்னர் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. கேரளாவில் காலையில் பெரிதாக தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகாத நிலையில், மாலை மற்றும் இரவு காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.
இந்தியளவில் திரைப்படம் முதல் நாளில் 7.5 கோடி வசூல் செய்திருக்கும் என தகவல்கள் வெளியான நிலையில், உலகம் முழுவதும் அந்த படம் 16.7 கோடி ரூபாயை வசூலித்து இருக்கிறது என அதிகாரபூர்வமாக படத்தின் ஹீரோ பிரித்திவிராஜ் தற்போது அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித்தின் கால்ஷீட்டை வீணாக்கிய லைக்கா.. இத மட்டும் செய்யலைனா ‘விடாமுயற்சி’ அவ்ளோதான்
புனித வெள்ளியான இன்று விடுமுறை நாள் என்பதால் வெள்ளி, சனி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் ஆடு ஜீவிதம் திரைப்படம் ஓடினாலே 50 முதல் 60 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியாகும் மலையாள படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், ஆடு ஜீவிதம் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை கடக்கும் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms