தளபதி விஜய்யின் வெற்றி ரகசியம் கூறிய பிரபல மலையாள நடிகர்.....

by adminram |
vijay
X

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என பிசியாக வலம் வருபவர் தான் நடிகர் பிருத்விராஜ். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இதர மொழிகளிலும் இவர் படங்கள் ரீமேக்காகி வருகின்றன.

இதையும் படிங்க: ஒப்பாரி பாடல் முதல் பிக்பாஸ் வரை – ‘பெரிய கறி’ இசைவாணியின் வாழ்க்கை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்!

இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், உருமி, காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள சினிமாவில் டாப் நடிகர்கள் பட்டியலில் பிருத்விராஜ் முக்கிய இடத்தில் உள்ளார்.

prithviraj

prithviraj

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பிருத்விராஜிடம், "நடிகர் விஜய்யிடம் உங்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு கிடைத்தால் என்ன கேள்வி கேட்பீர்கள்"? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிருதிவிராஜ், "விஜய்யிடம் உங்களுடைய வெற்றிக்கான மந்திரம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்பேன்.

விஜய்க்கு எந்த மாதிரியான படம் வெற்றி பெறும் என்று நன்றாக தெரியும். ஒரு கதையை கேட்கும்போதே அது வெற்றி பெறுமா? இல்லையா என்பதை விஜய்யால் கணித்து விட முடிகிறது. எந்த கதை வெற்றி பெறும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எல்லா நடிகர்களுக்கும் இந்த திறமை இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தலைவிக்கு ஒரு தக்காளி சோறு பார்சல்… சகலகலா ஆட்டத்தை சட்டுபுட்டுனு ஆரம்பித்த பிரியங்கா!

நடிகர் விஜய் குறித்து மலையாள நடிகர் இவ்வாறு பேசியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய்க்கு மலையாளத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை போலவே மலையாளத்திலும் விஜய் படம் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அவ்வளவு கூட்டம் அலைமோதும்.

Next Story