குக்கா வந்தா சமையல் மட்டும் பண்ணனும்! பிரியங்காவின் அடாவடி.. பிரபலம் சொன்ன தகவல்
Priyanka Deshpandey: மணிமேகலை போட்ட ஒரு பதிவு இன்றுவரை சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. விஜய் டிவியில் தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அங்கு நடந்த சம்பவத்தை பற்றி மணிமேகலை தன்னுடைய பதிவில் கூறியிருந்தார். அவர் யாரால் தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்படுகிறது என்பதை மறைமுகமாக கூறினாலும் அது தொகுப்பாளினி பிரியங்காவை தான் குறிப்பிட்டு கூறியிருக்கிறார் என தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க பல பிரபலங்களும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு இது சம்பந்தமான பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு நெருக்கமான சில பேரிடம் விசாரித்ததில் இது முழுக்க முழுக்க பிரியங்காவினால் தான் நடந்தது என கூறி இருக்கிறார் செய்யாறு பாலு.
இதையும் படிங்க: கங்குவா ரிலீஸ் தேதி எப்போன்னு தெரியுமா? அடடா சூப்பரான நாளை குறி வச்சிட்டாங்களே..!
பிரியங்காவின் டாமினேஷன் அதிகமாகவே இருந்ததாகவும் கூறினார். இந்த சீசனில் சக போட்டியாளராக உள்ளே நுழைந்த திவ்யா துரைசாமி கூட ஒரு நிகழ்ச்சியில் குக்காக வந்தால் சமையல் மட்டுமே பண்ணனுமே தவிர மற்றவர் வேலையில் மூக்கை நுழைக்கக் கூடாது. இது பிரியங்கா செய்த மிகப்பெரிய தவறு எனக் கூறியிருந்தார்.
இதை குறிப்பிட்டு பேசிய செய்யாறு பாலு இந்த சீசனில் சக போட்டியாளராக இருந்து இப்படி கூறும் பட்சத்தில் அவர் இருந்த வரைக்கும் இந்த மாதிரி தான் நடந்திருக்கும் போல என தெரிகிறது என்று கூறியிருக்கிறார். மேலும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனமும் பிரியங்காவுக்கு ஆதரவாகவே பேசி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மணிமேகலை நான் இந்த நிகழ்ச்சியை விட்டு போகிறேன் என்று சொல்ல அப்போது கூட இந்த நிகழ்ச்சியின் புரடக்ஷன் தரப்பில் பிரியங்கா விடம் மன்னிப்பு கேட்டுவிட்டு போங்கள் என்று சொன்னார்களாம்.
இது மேலும் மணிமேகலைக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் இனிமேல் இந்த பக்கமே நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு தான் வந்திருக்கிறார். இதைப் பற்றி கூட மணிமேகலை ஒரு வீடியோவில் நான்கு சீசன்கள் வரை நிகழ்ச்சி நன்றாக இருந்தது. அதனுடைய ப்ரொடக்ஷன் தரப்பிலிருந்து நல்ல விதமாக எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: விரைவில் வாழை 2!.. அது சிவனணைந்தனின் கதை!.. புது அப்டேட் கொடுத்த மாரி செல்வாராஜ்!…
ஆனால் இந்த சீசனில் இதனுடைய புரொடக்ஷன் மிக மிக வொர்ஸ்ட்டாக இருக்கிறது என்று கூறினார் மணிமேகலை. இன்னொரு பக்கம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பாதி பேர் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சிக்கு போய்விட்டார்கள். இப்போது மிக பிரபலமாக இருக்கும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதில் அவர்களுக்கு ஒரு விதத்தில் சந்தோஷத்தை கொடுத்திருக்கும்.
ஏனெனில் பிரபலமான ஒருத்தரை நம் பக்கம் இழுத்தால் இன்னும் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி எகிரும் என்ற காரணத்தினால் சன் டிவிக்கு அழைக்க மணிமேகலையை அணுகுவார்கள் என்று தெரிகிறது என்று செய்யாறு பாலு கூறினார். அதே நேரம் பிரியங்காவுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கும் பட்சத்தில் நிகழ்ச்சிகளை குறைப்பார்களா என்றால் கிடையவே கிடையாது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து லைக் போடும் தனுஷ்!.. இருவரும் மீண்டும் இணைவார்களா?!…
இன்னொரு பிரச்சினை வேற இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த சீசனில் டைட்டில் வின்னரே பிரியங்கா தான் என கூறி வருகிறார்கள். அது மட்டும் நடந்தால் இது மணிமேகலைக்கு இன்னும் ஆதரவு அதிகமாகும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் சமையலே தெரியாத ஒருத்தரை டைட்டில் வின்னர் ஆக்குவது எப்படி சாத்தியமாகும். அப்போ இது ஒருதலை பட்சமாகத்தான் சம்பந்தப்பட்ட நிறுவனம் பார்க்கிறது என தெரிகிறது என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.