Connect with us
priyanka

Entertainment News

ஒவ்வொன்னும் வேற லெவல்!.. பிரியங்கா மோகனின் அழகில் சொக்கிப்போன புள்ளிங்கோ!..

தமிழ் அப்பாவுக்கும், கன்னட அம்மாவுக்கும் பிறந்தவர் பிரியாங்கா மோகன். இவர் கன்னட சினிமாவில்தான் நடிக்க துவங்கினார்.

priyanka

அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். நானி நடித்த கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார்.

முதல் தமிழ் படமே சூப்பர் ஹிட் அடித்துவிட்டதால் ராசியான நடிகை ஆகிவிட்டார். அதேபோல் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

இந்த படம் அவ்வளவு வரவேற்பை பெறவில்லை. ஆனால், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அவர் நடித்து வெளியான டான் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

தற்போது ஒரு தெலுங்கு படத்திலும், தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சியை நம்பாமல் அழகை காட்டி மட்டுமே ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை இவர். ஒருபக்கம், அழகான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top