பிரியங்கா மோகன் கையில் டிகிரி காபி குடிக்க ரெடியா!.. ஆஹா என்னம்மா ஆவி பறக்க ஆத்துறாங்க!..

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். டாக்டர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார். இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி மாஸ் காட்டியது.

அதன் பின்னர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நடித்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: 2024-ல் ஒரு ஹிட் கூட இல்லை!.. இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!..

இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கையில் துப்பாக்கியை எல்லாம் ஏந்திக்கொண்டு நடித்த பிரியங்கா மோகனுக்கும் மீண்டும் தோல்வியே கிடைத்தது. மேலும், பிரியங்கா மோகன் முதல் முதலில் நடித்த செல்ஃபி என்னும் படமும் வெளியானது. அந்தப் படத்தில் படு கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்த பிரியங்கா மோகனின் 20 நிமிட காட்சிகளைக் காணவில்லை என படக்குழுவினர் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

லால் சலாம் படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது போல செல்ஃபி படத்தின் வீடியோ காட்சிகளும் காணாமல் போனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நல்ல வேலையாக படத்தின் பிரியங்கா மோகன் நடித்த கில்மா காட்சிகள் வெளியாகவில்லை என்கிற சந்தோசத்தில் அவர் தொடர்ந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ‘தல’ன்னா அது அஜீத் மட்டும்தான்… தைரியமாக சொன்ன அந்த பிரபலம் யார் தெரியுமா?..

அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், பிரியங்கா மோகன் சேலை அணிந்து கொண்டு கையில் பில்டர் காபியுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

 

Related Articles

Next Story