கை இல்லாத ஜாக்கெட்டு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு!.. விருந்து வைக்கும் பிரியங்கா மோகன்...

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் பிரியங்கா மோகன். பொறியியல் பட்டதாரியான இவருக்கு மாடலிங், சினிமாவில் நடிப்பது இரண்டிலும் ஆர்வம் ஏற்பட்டது. முதலில் இவர் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
நானியுடன் கேங்லீடர் எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஆந்திராவில் கொடுக்கப்படும் சிம்மா விருதுக்கு இவர் நாமினேட்டும் செய்யப்பட்டார். அடுத்து ஸ்ரீகாரம் என்கிற படத்தில் நடித்தார்.
தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் அறிமுகமனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து 100 கோடி வரை வசூல் செய்ய அம்மணிக்கு வாய்ப்புகள் குவிந்தது. சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் நடித்தார். தனுஷின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
வழக்கமான கதாநாயகியாக வலம் வராமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் புகழ் இயக்குனர் எம்.ராஜேஷ் ஜெயம் ரவியை வைத்து இயக்கி வரும் பிரதர் படத்திலும் அம்மணிதான் கதாநாயகி.
ஒருபக்கம், சினிமாவில் நீடிக்கவும், வாய்ப்புகளை பெறவும் அசத்தலான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை பெற்று வருகிறார். அந்தவகையில், கை இல்லாத ஜாக்கெட் அணிந்து கட்டழகை காட்டி பிரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.