சிவகார்த்திகேயனிடம் சிபாரிசு வாங்கிக்கோங்க தனுஷ்.!? எல்லாம் அந்த இளம்சிட்டுக்காக தான்.!

by Manikandan |
சிவகார்த்திகேயனிடம் சிபாரிசு வாங்கிக்கோங்க தனுஷ்.!? எல்லாம் அந்த இளம்சிட்டுக்காக தான்.!
X

தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பின் மூலம் தற்போது ஹாலிவுட் வரை தனது நடிப்பை நிலைநாட்டி வருகிறார் தனுஷ். கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்து இருக்கின்றன.

இந்த படங்களின் சூட்டிங் பெரும்பாலும் முடிந்து விட்டது. அதன் காரணமாக தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் தனுஷ்.

அடுத்ததாக ராக்கி, சாணி காயிதம் படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்க இளம் சென்சேஷனல் ஹீரோயின்களை களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இதையும் படியுங்களேன் - விக்ரம் படத்தின் அந்த பிரிண்ட் எப்போது வருமோ.?! காத்திருக்கும் ரசிகர்கள்.! இதுதான் கரணம்.!

அதன்படி பிரியங்கா மோகனிடம் தேதிகள் கேட்டுள்ளதாகவும், பிரியங்காவுக்கு படத்தின் கதை பிடித்து இருந்தாலும், தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் இதில் நடிக்க தேதிகள் இன்னும் ஒதுக்கி தரவில்லையாம்.

அதனால், படக்குழு பிரியங்கா மோகனை புக் செய்யலாமா அல்லது கீர்த்தி ஷெட்டியை புக் செய்யலாமா என்று யோசித்து வருகிறதாம் படக்குழு. இதனை கவனித்த சினிமாவாசிகள் சிவகார்த்திகேயன் உடன் ஏற்கனவே இரண்டு முறை ஹீரோயினாக நடித்த ஹீரோயின் என்பதால் அவரிடம் கூறி சிபாரிசு வாங்கி தேதிகள் வாங்க சொல்லுங்கள் என்று நகைச்சுவையாக கூறி வருகின்றனர்.

Next Story