பிக்பாஸ்லயும் பிரியங்காவ முன்னிலை படுத்த விரும்பிய நிர்வாகம்.. கமலிடம் முடியுமா?

Priyanka: சோசியல் மீடியாவில் இப்போது ஹாட் டாப்பிக்காக போய்க் கொண்டிருப்பது பிரியங்கா மற்றும் மணிமேகலை பற்றிய செய்திதான். கூடவே பல யூடியூப்பர்ஸ்களும் இதை ஒரு பெரிய நாட்டுப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு பல பேரிடம் பேட்டி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

ஒரு சில பேர் தானாகவே இதை பற்றி பேசி வருகிறார்கள். இந்தப் பிரச்சினை வருவதற்கு முன்பு வரை அனைவருமே பிரியங்காவின் நலம் விரும்பிகளாகத்தான் இருந்தார்கள். அவருடைய திறமை, ரசிகர்களை சிரிக்க வைப்பது, அவருடைய அணுகுமுறை, நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வது என பிரியங்கா இல்லாவிட்டால் நிகழ்ச்சி போரடித்து விடுமே என்றுதான் ரசிகர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க: ஒருவழியாக வாய் திறந்த குரோஷி… குக் வித் கோமாளி செட்டில் என்ன நடந்தது?

ஆனால் மணி மேகலை செய்த பெரிய புரட்சி ஒட்டுமொத்தத்த்தையும் ஒரே நாளில் மாற்றியது. இதை பற்றி பேசிய பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பிரியங்காவுக்கு எதிராக பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ஒரு இடத்திற்கு வர அவர் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? அவர்களை ஏன் உதாசீனப்படுத்தனும்?

பிரியங்காவுக்கு ஏன் இந்தளவுக்கு சேனல் சப்போர்ட் செய்கிறது என்றெல்லாம் கேட்டிருக்கிறார். மேலும் இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிருப் பிரியங்காவை கண்டபடி பேசிய ஒரு வீடியோ சமீபகாலமாக வைரலாகி வருகிறது. அதில் பிரியங்காவை பார்த்து நிரூப் ‘உனக்கு ஒருத்தரை பிடிக்கலைனா அவரை சாக்கடைக்குள் பிடிச்சு தள்ளுற வரைக்கும் விடமாட்ட’ என பேசியிருப்பார்.

இதையும் குறிப்பிட்டு செய்யாறு பாலு கூறினார். அதுமட்டுமில்லாமல் அதே பிக்பாஸ் வீட்டில் தாமரையை முதலில் இருந்து டார்கெட் செய்ததே பிரியங்காதான் என்றும் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.மேலும் பிரியங்காவுக்கு என ஒரு தனி பாலிட்டிக்ஸ் இருக்கிறது. அதை பயன்படுத்திதான் நிகழ்ச்சியே நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: கிரிக்கெட்டர்களின் ஈகோ… தப்பித்தாரா ஹரிஷ் கல்யாண்..லப்பர் பந்து திரைவிமர்சனம்…

இந்த பிரியங்காவை மட்டும் சேனல் ஏன் வளர்க்குறீங்க? அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க? என்றும் செய்யாறு பாலு கேட்டிருக்கிறார். மேலும் இன்னொரு விஷயத்தையும் செய்யாறு பாலு கூறினார். பிக்பாஸில் கலந்து கொண்ட போது சேனல் பிரியங்காவைத்தான் டைட்டில் வின்னராக அறிவிக்க திட்டமிட்டிருந்தார்களாம்.

ஆனால் கமல்தான் மறுத்தாராம். அப்படியே கொடுக்கனும்னு நினைத்தால் இதை பற்றி வெளியே சொல்லிவிடுவேன் என கமல் சொன்ன பிறகுதான் ராஜுமோகனுக்கு சென்றிருக்கிறது. இருந்தாலும் பிரியங்கா ரன்னர் அப்பில் வந்தார். இப்படி பிரியங்காவையே முன்னிலைப் படுத்த ஏன் சேனல் ஆர்வம் காட்டி வருகிறது என தெரியவில்லை என செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: தெலுங்கு இயக்குனரால் பாலியல் தொல்லைக்கு ஆளானாரா தமிழ் நடிகை? யார் தெரியுமா?

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it