ஷூட்டிங் டைம்ல மூக்குல ரத்தம் வந்துச்சு! – காஷ்மீரில் அவதிப்பட்ட லியோ படக்குழுவினர்..

Published on: March 24, 2023
---Advertisement---

தமிழில் உள்ள ட்ரெண்ட் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்சமயம் உள்ள இளம் தலைமுறையினர் நடிகருக்கு ரசிகராவது போலவே இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் ஆகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு பெரும் ரசிக கூட்டம் உருவாகியுள்ளது.

லோகேஷ் திரைப்படம் என்றாலே அதை திரையரங்கில் சென்று பார்க்க அவர்கள் ஆவல் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் லோகேஷ் இயக்கி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

லியோ படத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் காஷ்மீரில் துவங்கியது. 50 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் போன சமயம் காஷீரில் பயங்கரமான குளிர். இரவு நேரங்களில் மைனஸ் 5 டிகிரி வரை வெப்பநிலை குறைந்துள்ளது. மேலும் காலை தாமதமாக உதிக்கும் சூரியன், மாலையில் சீக்கிரமே மறைந்துவிடுகிறது.

காஷ்மீரில் சிரமங்கள்:

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் படப்பிடிப்பை நடத்த வேண்டும். இந்த படப்பிடிப்பை முடிப்பதற்கும் படக்குழுவினர் மிகவும் கஷ்டப்பட்டிருக்கின்றனர். அதிக சிரமங்களுக்கு நடுவே லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு குழுவினரை கெளரவிக்கும் முறையில் லோகேஷ் அவர்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்திருந்தனர். தொழிலாளர் ஒருவருக்கு குழந்தை பிறந்து 10 நாட்கள் ஆகின்றன. இன்னும் அவர் குழந்தையை நேரில் பார்க்கவில்லை. அதே போல பல வேலையாட்கள் நடுக்கும் குளிரிலும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து படத்திற்காக பணிப்புரிந்துள்ளனர்.

அதில் ஒருவர் கூறும்போது மாலை நேரங்களில் திடீரென மூக்கில் ரத்தம் வரும். ஏன் வருகிறது என்றே தெரியாது என கூறியுள்ளார். இவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவேதான் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.