மகனை களம் இறக்கி காணாமல் போன தயாரிப்பாளர்!.. எவ்வளவு ஹிட் கொடுத்த மனுஷன்!..

Published on: March 18, 2024
Indian movie
---Advertisement---

மகன்களால் சில தந்தைகள் முன்னுக்கு வருவார்கள். ஆனால் இங்கு தலைகீழ். மகன்களால் காணாமல் போய்விட்டார் பிரபல தயாரிப்பாளர். அவர் தான் ஏ.எம்.ரத்னம். இவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

நடிகை விஜயசாந்தியின் மேக் அப் உதவியாளராக இருந்தவர் தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். விஜயசாந்தி தெலுங்கில் பாப்புலராக இருந்த காலகட்டத்தில் தன்னோட உதவியாளருக்கு ஒரு படம் பண்றாங்க. அப்படித்தான் முதன் முதலாகத் தயாரிப்பாளர் ஆனார் ஏ.எம்.ரத்னம்.

AM.Rathnam
AM.Rathnam

முதல் படம் விஜயசாந்தியை வைத்து தெலுங்கில் தயாரிக்கிறார். அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அடுத்த படத்தில் இவரே டைரக்ட் பண்றாரு. 3வது படம் பண்றாரு. இரண்டுமே நஷ்டமாகிறது. தமிழில் இயக்குனர் ஷங்கர், கமல் இணைந்து இந்தியன் படம் பண்றாரு. இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சூர்யா மூவீஸ் என்ற பெயரில் இவர் படங்களைத் தயாரிக்கிறார். சூர்யா மூவீஸ் என்றாலே ஹிட் படங்கள் தான் என்றாகிவிட்டது. தொடர்ந்து ரன், காதலர் தினம் என்று பல ஹிட் படங்களைக் கொடுக்கிறார்.

E20 U20
E20 U20

அவருக்கும் தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவர் தன் மகன் ரவிகிருஷ்ணாவை ஹீரோவாக்கி செல்வராகவன் இயக்க 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தை எடுத்தார். அது செம மாஸ். அடுத்ததாக இன்னொரு மகன் ஜோதி கிருஷ்ணாவை இயக்குனராக களம் இறக்கினார். இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தை இயக்கினார். இந்தப் படம் பிரம்மாண்ட செலவில் உருவானது. ஏ.ஆர்.ரகுமான் மியூசிக். திரிஷா கதாநாயகி. ஆனால், படம் பிளாப் ஆனது. இதே ஜோதிகிருஷ்ணாவின் இயக்கத்தில் கேடி, சக்கரைக்கட்டி படங்கள் வந்தன. அவையும் பிளாப் தான்.

இப்போது 7ஜி ரெயின்போ காலனியோட 2ம் பாகமும் செல்வராகவனே பண்றாருன்னு ஒரு பேச்சுவார்த்தை போய்க்கிட்டு இருக்குதாம்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.