அவர் மட்டும் இல்லன்னா அந்த வெற்றி படம் இல்ல – பாரதிராஜாவுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட தகராறு!..

Published on: April 19, 2023
---Advertisement---

தமிழ் திரையுலகில் பல காலமாக புகழ்பெற்ற இயக்குனர்களாக இருப்பவர்களில் முக்கியமானவர் பாரதிராஜா. மணிரத்னம், பாரதிராஜா மாதிரியான சில இயக்குனர்கள் எத்தனை காலம் ஆனாலும் பிரபலமான இயக்குனர்களாகவே இருந்து வருகின்றனர்.

பாரதிராஜா பல ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை அவரது காலக்கட்டத்திலேயே செய்தவர் பாரதிராஜா. அவரது திரைப்படங்களில் 16 வயதினிலே, வேதம் புதிது போன்ற பல படங்கள் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.

பெரும்பாலும் பாரதிராஜா அவரே கதை எழுதி திரைப்படம் எடுக்க மாட்டார். யாராவது எழுதிய கதை அவருக்கு பிடித்திருந்தால் அதை படமாக்குவார். இந்த நிலையில் கலைப்புலி எஸ்.தாணு அப்போதும் படங்களுக்கு தயாரிப்பு செய்து வந்தார்.

அப்போது ரத்னகுமார் என்னும் பிரபலம் இவரிடம் ஒரு கதையை கூறியுள்ளார். கிராமத்தில் நடக்கும் குடும்ப கதையாக இருந்தது. அதை கேட்டதுமே தாணுவிற்கு அந்த கதை பிடித்துவிட்டது. இந்த கதையை பாரதிராஜா படமாக்கினால்தான் சரியாக இருக்கும் என நினைத்தார் தாணு. ஆனால் ஏற்கனவே பாரதிராஜாவிற்கும் தாணுவிற்கும் இடையே பிரச்சனை இருந்தது.

இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இருந்த பிரச்சனை:

எனவே நேரடியாக சென்று பாரதிராஜாவிடம் பேசுவது நடக்காத காரியம். அந்த சமயத்தில் இயக்குனர் சித்ரா லெட்சுமணன் பாரதிராஜாவிடம் நல்ல நட்பில் இருந்தார். எனவே கலைபுலி எஸ் தாணு சித்ரா லெட்சுமணனை தொடர்பு கொண்டு எனக்காக பாரதி ராஜாவிடம் பேசுங்கள் என கூறியுள்ளார்.

சித்ரா லெட்சுமணனும் பாரதி ராஜாவிடம் பேச பாரதி ராஜா ஒப்புக்கொண்டார். இப்படியாகதான் கிழக்கு சீமையிலே என்னும் அந்த திரைப்படம் தயாரானது. அந்த படம் முடியும் வரையில் தயாரிப்பாளரும் இயக்குனரும் பேசிக்கொள்ளவே இல்லை. நடுவில் சித்ரா லெட்சுமணன் இருந்துதான் இந்த படத்தை முடித்து கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா செய்த வேலை!.. எம்.ஜி.ஆர் முன் உட்கார பயந்த வெண்ணிறாடை மூர்த்தி!..

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.