கார்த்திக் பேச்சைக் கேட்டு கேம் ஆடிய பானுப்பிரியா... பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்
கலைப்புலி தாணு தயாரிக்க ரஜினியை வைத்து பைரவி படத்தை இயக்கி அவரை சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்குக் கொண்டு சென்றவர் இயக்குனர் எம்.பாஸ்கர். இவரது மகன் பாலாஜி பிரபு தயாரிப்பாளர். இவர் கார்த்திக் நடித்த சக்கரவர்த்தி படத்தை இவரது தந்தை தயாரிக்கும்போது என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சாரை வச்சி சக்கரவர்த்தி படம் பண்ணினோம். ஆனா அவர் ரொம்ப டிரபிள் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு. அவர் சில பழக்க வழங்கங்களுக்கு அடிமையாக ஆரம்பிச்சிட்டாரு. அவருக்கிட்ட ரொம்ப பர்சனலா உள்ள போக வேண்டாம். அவர் அப்படி இருந்ததால சூட்டிங்கிற்கு பர்பெக்ட்டா அவரால வரமுடியல. அவரு அதை தெரிஞ்சி செய்றாரா, தெரியாம செய்றாரான்னுலாம் இல்ல.
ஆனா அவரு பேசிக்கா ரொம்ப நல்லவருன்னு எங்க அப்பா சொல்வாரு. அவர் நல்ல எண்ணங்கள் உள்ள பெரிய ஆர்டிஸ்ட் தான். இன்னும் பெரிய உயரத்தைத் தொட்டு இருக்க வேண்டியவர். தனிப்பட்ட குணநலன்களால் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் மிஸ் ஆனது. அவர் வேற மாதிரி டிராவல் பண்ண காரணமாயிடுச்சு.
தயாரிப்பாளர் வந்து ஏன் சூட்டிங் வரலன்னு கேட்டா ஆஸ்பத்திரில போய் படுத்துக்கிட்டு டிரிப்ஸ் ஏத்திக்குவாராம். அப்போ போய் பார்த்தா என்ன செய்ய முடியும். உடம்புக்கு முடியாம ஆஸ்பத்திரில இருக்காருன்னு சொல்வாங்க. இப்படியே பல சிக்கல்கள் வந்தது. கடைசியில் ஒரு பாடல் தான் பாக்கி. அப்பவும் வேணும் என்றே காலில் கட்டுப் போட்டுக் கொண்டு படுத்துவிட்டார்.
அதனால் அந்தப் பாடலுக்கு அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று காலில் ஷூ கூட போட வேண்டாம். அப்படியே வந்து நின்னா போதும்னு கீழே பனிப்புகையாக எழுப்பி பானுப்பிரியாவை ஆடவிட்டு அந்தப் பாடலை எடுத்து விட்டார்கள். அதே போல கார்த்திக் பானுப்பிரியாவையும் படத்தில் தொடர்ந்து நடிக்காதேன்னு சொல்லி தூண்டி விட்டுள்ளார்.
அந்தப் படத்திற்காக பானுப்பிரியாவுக்கு 5 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அட்வான்ஸ் 1 லட்சம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடிக்க வராமல் முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என்றாராம் பானுப்பிரியா. ஏன் நடிக்க வரல? படம் முழுசா முடிச்சதுக்கு அப்புறம் பேமெண்ட் தருவோம்னு சொன்னதுக்கு எனக்கு நம்பிக்கை இல்லன்னாராம் பானுப்பிரியா.
ஒரு நடிகைக்கே நம்பிக்கை இல்லன்னா படம் போட்டு தயாரிக்கிற தயாரிப்பாளருக்கு அவங்க மேல எப்படி நம்பிக்கை வரும்? அப்புறம் அப்பா அவரு பேருல டிடி 4லட்ச ரூபாய்க்கு எடுத்து தயாரிப்பாளர் சங்கத்துல லட்டரோட சேர்த்து கொடுத்து விட்டார். அதுல பானுப்பிரியா படம் முழுவதும் நடிச்சிக் கொடுத்து, டப்பிங் எல்லாம் முடிச்சதும் இந்த டிடியைக் கொடுத்துடுங்கன்னு எழுதி இருந்தார்.
படம் 92ல் ரிலீஸாவதாக இருந்தது. அப்புறம் வந்த சில பிரச்சனைகளால் 95ல் தான் ரிலீஸானது. அதன்பிறகு தான் பானுப்பிரியாவிடம் சம்பளம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சக்கரவர்த்தி படத்தை கதை எழுதி தயாரித்து இயக்கியவர் எம்.பாஸ்கர். படத்திற்கு இசை அமைத்தவர் தேவா. கார்த்திக், பானுப்பிரியா, கவுண்டமணி, வி.கே.ராமசாமி, நிழல்கள் ரவி, மேஜர் சுந்தரராஜன், குமரிமுத்து, லூஸ்மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். எங்க எங்க பொட்டிவச்சா, ஹலோ ஹலோ டியர், இடத்து காளை. வாழ தோப்புக்குள்ள ஆகிய பாடல்கள் உள்ளன.