மனோஜ் பாரதிராஜாவுக்கு அவ்வளவு மனஅழுத்தமா? திடீர் இறப்பு குறித்து பகீர் கிளப்பும் பிரபலம்!

by sankaran v |   ( Updated:2025-03-26 02:28:50  )
manoj
X

#image_title

பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மாரடைப்பால் காலமானார். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகரும், தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...

பாரதிராஜா வயது மூப்பின் காரணமாக ஓய்வில் இருக்கிறார். அவரது சூழலில் அவரைக் கவனிப்பதே மனோஜ்தான். இந்த நிலையில் அவர் காலமானது அதிர்ச்சியாக உள்ளது. இன்று வரை பேரும் புகழும் பாரதிராஜாவுக்கு இருக்கிறது. அவர் பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தனது மகனையும் கதாநாயகனாக்கி அழகுபார்க்க ஆசைப்படுகிறார்.

அதனால் தாஜ்மகால்னு ஒரு படம் இயக்குகிறார். அதில் மகன் பிரபலமாக வேண்டும் என்று ஏ.ஆர்.ரகுமானை இசை அமைக்க வைக்கிறார். ராஜீவ் மேனனை கேமரா மேனாகப் போடுகிறார். மண்வாசனை சார்ந்த அருமையான கதையை மகனுக்காக எடுக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் டிரெய்லரைப் பார்க்கும்போது படம் வேற லெவல்ல போகும். மகன் பெரிய ஆளாக வருவான்னு அனைவரின் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

manoj

#image_title

ஆனால் படம் படுதோல்வியாகி விடுகிறது. இதனால் பாரதிராஜா மனம் உடைந்து அடுத்த படத்தில் மாடர்ன் இளைஞனாக மனோஜைக் காட்டுகிறார். அல்லி அர்ஜூனா என்ற அந்தப் படத்தை சரண் இயக்குகிறார். அப்போதும் பெரிய அளவில் படம் போகவில்லை. ஆனால் பாடல்கள் சூப்பராக இருந்தது

இந்த நிலையில் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் சமுத்திரம் படத்தில் நடித்தார். அதில் சரத்குமார் நடித்து இருந்தார். அந்தப் படம் பிக்கப் ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அதனால் இயக்குனராக வேண்டும் என்று நினைக்கிறார். தொடர்ந்து அவருக்குப் பல தடைகள் வருகிறது. இந்நிலையில் அப்பாவை வைத்து 2023ல் மார்கழித் திங்கள் படத்தை இயக்குகிறார். அதுவும் பெரிய அளவில் எடுபடவில்லை. அதனால் அவருக்கு எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் எல்லாமே தோல்வியில் முடிந்தது. இந்த மன அழுத்தம் அவருக்கு இருந்து கொண்டே இருந்தது. அதேநேரம் அவருக்கு பெரிய இயக்குனரின் மகன் என்ற திமிர் எப்போதுமே இருந்தது இல்லை.

அதெல்லாம் வதந்தி தான். அது வரத்தான் செய்யும். அவருக்கு சொத்துப் பிரச்சனை வந்ததுன்னு சொல்றாங்க. அதெல்லாம் சாதாரணமான விஷயம். அதனால் மன அழுத்தம் வரவாய்ப்பில்லை. பிசினஸ் எல்லாம் அவர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் சினிமாவில் பெரிய ஆளாக வர முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. 48 வயசுல இப்படி திடீர்னு ஒரு மாரடைப்பு. ஏற்கனவே ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி பைபாஸ் அறுவை சிகிச்சை எல்லாம் பண்ணி இருக்காங்க. மனோஜ் மலையாள நடிகை நந்தனாவை மணந்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story