மணிரத்னம் என்னை கடித்து குதறிவிட்டார்!.. புலம்பும் தயாரிப்பாளர்.. இப்படி நடு ரோட்டுல நிற்க வச்சிட்டாரே!!
“கூலி”, “மாண்புமிகு மாணவன்”, “வேட்டையாடு விளையாடு” போன்ற பல திரைப்படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். மேலும் இவர் “வாழ்க்கை”, “நதி எங்கே போகிறது” போன்ற பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மாணிக்கம் நாராயணன், மணிரத்னம் படத்தை வெளியிட்டதால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், கீர்த்தனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கன்னத்தில் முத்தமிட்டால்”. இத்திரைப்படம் வெளிவந்தபோது படுதோல்வியடைந்திருந்தாலும் இப்போதும் இத்திரைப்படம் திரைக்கதைக்காக பேசப்பட்டு வருகிறது.
மாணிக்கம் நாராயணனும் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினியும் நல்ல நண்பர்கள் என்பதால் “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு, சிட்டி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வாங்கி வெளியிட்டிருக்கிறார் மாணிக்கம் நாராயணன். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் அதற்கு முன்பு வெளிவந்த “அலைபாயுதே” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததால் இத்திரைப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்த்திருக்கிறார்.
ஆனால் இத்திரைப்படத்தின் பிரிவ்யூ ஷோவை பார்த்த மாணிக்கம் நாராயணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். இத்திரைப்படம் நிச்சயமாக ஓடாது என்றே தோன்றியிருக்கிறது. அதே போல் இத்திரைப்படம் வெளிவந்து படுதோல்வியடைந்தது.
ஒரு கோடியே 58 லட்சம் கொடுத்து “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தை வாங்கியிருக்கிறார் மாணிக்கம் நாராயணன். திருவண்ணாமலை பகுதியில் உள்ள தியேட்டரில் இந்த படத்தை பார்த்தவர்கள் திரையரங்கின் சீட்டுகளை கிழித்துவிட்டார்கள் என்று மாணிக்கம் நாராயணனை திரையரங்கு உரிமையாளர் அணுகியிருக்கிறார். அதே போல் இரண்டு நாட்களில் பல பகுதிகளில் இருந்த திரையரங்குகளில் இருந்து படப்பெட்டி அனைத்தும் இவரிடம் திரும்பி வந்துவிட்டனவாம்.
திரையரங்கு உரிமையாளர்களுக்கு பணம் Refund கொடுக்க முடியாமல் மலேசியாவிற்கு ஓடிப்போய்விட்டாராம். அங்கு தேவையான பணத்தை தயார் செய்துவிட்டுத்தான் சென்னைக்கே திரும்பினாராம். இது குறித்து அந்த பேட்டியில் மாணிக்கம் நாராயணன் பேசியபோது, “மணிரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் என்று ஒரு படத்தை எடுத்து என்னை கடித்து குதறிவிட்டார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.