Jayam Ravi: பிரதர் படத்தின் ரிசல்ட்!.. அடுத்த படத்துக்கும் ஆப்புதானா?!.. புலம்பும் தயாரிப்பாளர்!…

Published on: November 9, 2024
brother
---Advertisement---

Jayam Ravi: திரையுலகில் ஒரு நடிகருக்கான மார்க்கெட் என்பது அவரின் முந்தைய படத்தின் ரிசல்ட்டை பொறுத்தே முடிவு செய்யப்படும். அது ரஜினி, விஜயகாக இருந்தாலும் சரி. ரஜினியின் அண்ணாத்த படம் சரியாக போகாததால் அப்படத்தில் வாங்கிய சம்பளத்தை விட குறைவான சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினி.

அதே ஜெயிலர் சூப்பர் ஹிட் அடிக்கவும் அண்ணாத்த படத்தில் வாங்கியதை விடவும் சம்பளம் அதிகமாக வாங்க துவங்கிவிட்டார். இப்படித்தான் ஒரு நடிகரின் சம்பளம் நிர்ணயிக்கப்படும். இது நடிகருக்கு மட்டுமல்ல இயக்குனருக்கும் பொருந்தும். தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கேரண்டி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி.

இதையும் படிங்க: STR: 40 years of STR!… ஃபுல்லா கூஸ்பமஸ் தான்!.. வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிரவிட்ட ரசிகர்கள்…!!

இவர் நடிப்பில் அதிகமான வசூலை பெற்றது தனி ஒருவன் படம் மட்டுமே. இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதேபோல் கோமாளி படம் நல்ல வசூலை பெற்றது. மற்ற படங்களெல்லாம் ஓரளவுக்கு லாபத்தை கொடுத்தது. கடந்த சில வருடங்களாக தனது மாமியாரின் தயாரிப்பில் நடித்து வந்தார் ஜெயம் ரவி.

அப்படி வெளியான சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. மாமியார் நஷ்ட கணக்கு காட்ட, ஜெயம் ரவியோ அந்த படங்கள் லாபம்தான் என சொல்லி வருகிறார். அதோடு, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிவதாகவும் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

brother
#image_title

ஜெயம் ரவி நடிப்பில் உருவான பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இந்த படத்திற்கு பெரிய புரமோஷன் எதுவும் செய்யப்படவில்லை. அதோடு, படமும் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதால் தோல்வி அடைந்துவிட்டது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர் என எல்லோருக்கும் இப்படம் நஷ்டத்தை கொடுத்துவிட்டது.

ஒருபக்கம், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஜெயம் ரவியை வைத்து ஜீனி என்கிற படத்தை உருவாக்கி வருகிறார். வழக்கமாக ஜெயம் ரவி படத்திற்கு என்ன செலவு செய்வார்களோ அதை விட மிகவும் அதிக பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். பிரதர் படம் ஊத்திக்கொண்டதால் அது ஜீனி படத்தின் வியாபாரத்தை பாதிக்கும் என பயப்படுகிறாராம் ஐசரி கணேஷ்.

அதேநேரம், ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாகும் காதலிக்க நேரமில்லை படம் ஓடிவிட்டால் அவர் தப்பித்துக்கொள்வார் என்கிற திரையுலகம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.