சிவாஜியே செய்யலங்க! எப்பேற்பட்ட நடிகர்? ‘போர்த்தொழில்’ பட ஹீரோவை வாரும் தயாரிப்பாளர்
சமீபத்தில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் போர்த்தொழில். இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடித்திருப்பார்கள். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை பரபர கதையுடனே நகரும். அதனாலேயே மக்கள் கூட்டம் அலை மோதியது.
ஒரு சீரியல் கில்லரையும் அதற்கான பின்னனியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு சீரியஸான போலீஸ் அதிகாரியுடன் கத்துக்குட்டி போலீஸும் சேர்ந்து கண்டுபிடிக்கும் கதைதான் இந்த போர்த்தொழில் திரைப்படம். படம் வெளிவந்ததே தெரியாமல் இருந்த நிலையில் இரண்டாம் நாளில் இருந்து ஏகப்பட்ட கலெக்ஷனை படம் அள்ளியது.
முக்கியமாக சரத்குமாருக்கு இந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த நிலையில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக வந்த தயாரிப்பாளர் கே.ராஜன் போர்த்தொழில் படத்தையும் அந்தப் படத்தின் ஹீரோவையும் பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார்.
அதாவது படம் மிகவும் அருமையாக இருந்தது என்றும் இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன், ஆனால் அது உண்மையாக இருக்கக் கூடாது என்றும் கூறினார். அதாவது ஒரு படம் வெற்றிப்பெற்றால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அந்தப் படத்தின் ஹீரோவைத்தேடி தான் ஓடுவார்கள். என்னமோ அந்தப் படத்தையே தூக்கி நிறுத்தியது அந்த ஹீரோதான் என்று.
அதே போல் போர்த்தொழில் படத்தின் தயாரிப்பாளர் அந்த ஹீரோவிடம் இன்னொரு படத்திற்கான கமிட்மெண்டை பற்றி பேச அதற்கு அந்த ஹீரோ 2 கோடி சம்பளம் கேட்டாராம். இதை குறிப்பிட்டு பேசிய ராஜன் அந்த ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை ஏற்றியிருக்கலாம். ஆனால் இப்படி தயாரிப்பாளரின் நிலைமையையும் யோசிக்காமல் ஹீரோ பண்ற வேலைகள் தான் ஜீரணிக்க முடியவில்லை என கூறி சிவாஜியின் ஒரு சம்பவத்தை உதாரணமாக கூறினார்.
இதையும் படிங்க : சக நடிகர்களுடன் எம்.ஜி.ஆர் இப்படித்தான் இருப்பார்..! உண்மையை போட்டு உடைத்த நடிகை..!
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சிவாஜியை வைத்து பேசும் தெய்வம் என்ற படத்தை எடுத்தாராம். அப்போது சிவாஜிக்கு சம்பளம் 75000. அந்தப் படம் மாபெரும் வெற்றிப் பெற்றதாம். அதனை அடுத்து மீண்டும் குலமா குணமா என்ற படத்திற்காக சிவாஜியை நடிக்க வைக்க அவரது அண்ணன் சண்முகத்திடம் கால்ஷீட்டிற்காக கேட்டாராம்.
அப்போது சண்முகம் கோபாலகிருஷ்ணனிடம் இந்தப் படத்திற்கு ஒரு லட்சம் அதிகமாக கொடுத்தால் நன்றாக இருக்கும் , மேலும் பேசும் தெய்வம் படம் வெற்றியும் பெற்றது. அதனால் கொஞ்சம் மனசு வைத்து அதிகரித்து கொடுங்கள் என கேட்டாராம்.
இதையும் படிங்க : ஒரே பேர்ல இத்தன திரைப்படமா..? – ஆனா நடிச்சது வேறு வேறு ஆளு யார், யாருன்னு தெரியுமா?
ஆனால் கோபால கிருஷ்ணன் அதெல்லாம் முடியாது என்று சொல்லி 5000 அதிகரித்து 80000 அதன் பின் 90000 என சம்பளம் கொடுத்தாராம். இதை சொன்ன கே.ராஜன் அந்தக் காலத்தில் தயாரிப்பாளரின் நிலையை புரிந்து கொண்டு நடிகர்கள் அட்ஜெஸ்ட் செய்து போய்விடுவார்கள். ஆனால் இப்போ நிலைமையே வேறு என கூறினார்.