நீ ஒரு படம் எடுத்தியே!.. ஒரு நாளாவது ஓடுச்சா?.. ப்ளூ சட்டை மாறனை கிழித்துத் தொங்க விட்ட கே. ராஜன்!..
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் தனக்கு கொடுத்த டாஸ்க்கை நிறைவேற்றுவது போல கழுவி ஊற்றினாலும், வசூல் வேட்டையை வடை.. வடை என உருட்டி வந்தாலும், அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் ஜெயிலர் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியுள்ளது.
420 கோடி வசூலை கடந்து கமல்ஹாசனின் ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலை ஜெயிலர் முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஸ்டாப் 500 கோடி தான் என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: பொதுவா இதெல்லாம் ரஜினி பண்ண மாட்டாரே!.. ஜெயிலர் வசூல் தந்த சந்தோஷம்!.. அதுக்கு தலையாட்டிட்டாராம்!..
நெகட்டிவ் பப்ளிசிட்டி பண்ண ப்ளூ சட்டை மாறன்:
இந்நிலையில், யூடியூப் ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் கே. ராஜன் ரஜினிகாந்த் தான் ரியல் சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபித்து விட்டார் என்று பேசிய அவரிடம் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து வன்மத்தை கக்கி வருகிறாரே என தொகுப்பாளர் கேட்க நல்லதை பேசிட்டு இருக்கும் போது ஏன் ஒரு கெட்டதை பத்தி பேசுறீங்க தம்பி என ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்த கே. ராஜன் ப்ளூ சட்டை மாறனை துவைத்து தொங்கப் போட்டுள்ளார்.
விஜய் ரசிகர்கள் கிளப்பிய சூப்பர்ஸ்டார் பட்டம் சர்ச்சை ஒரு பக்கம் ஜெயிலர் படத்துக்கு பூஸ்ட் அப் ஆகிய நிலையில், இன்னொரு பக்கம் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து செய்த நெகட்டிவ் பப்ளிசிட்டியும் அப்படி அந்த படத்தில் என்ன தான் இருக்கு என ரசிகர்களை பார்க்கத் தூண்டி விட்டது என சினிமா பிரபலங்கள் ப்ளூ சட்டை மாறனும் விஜய் ரசிகர்களும் ஜெயிலர் படத்துக்கு தீங்கு விளைவிக்க நினைத்து நல்லது தான் பண்ணியிருக்காங்க என வச்சு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜயோட சம்பளம் இவ்ளோதானா? மனுஷன வேற மாதிரி நினைச்சுட்டோமே – உண்மையை போட்டுடைத்த மன்சூர்
ஒரு நாளாவது ஓடுச்சா?:
மேலும், ப்ளூ சட்டை மாறன் பற்றி தொகுப்பாளர் கேட்க, கடுப்பான கே. ராஜன் ”நீ ஒரு படம் எடுத்தியே.. ஆண்டி இண்டியன்னு அந்த படம் ஒரு நாளாவது தியேட்டர்ல ஓடிச்சா.. இப்படி எல்லாம் ஒரு படம் ஓடுமான்னு விஜய், அஜித்தே அசந்து போய் பார்த்துட்டு வராங்க, ப்ளூ சட்டை மாறன் எல்லாம் சொன்னா ரஜினி ரசிகர்கள் தியேட்டருக்கு குடும்பத்தோட போறதை நிறுத்திடுவாங்களா என விளாசி தள்ளி உள்ளார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…