தளபதி 68 புரொட்யூசர் தப்பிச்சிட்டாரு- அட்லீயை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்…
“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தை முதலில் அட்லீ இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அட்லீ பாலிவுட்டில் இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆதலால் “தளபதி 68” திரைப்படத்தை அட்லீ இயக்குவதற்கு சாத்தியம் இல்லாமல் போனது.
அதனை தொடர்ந்து “தளபதி 68” திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிச்சந்த் மல்லினேனி இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் பின்னாளில் அவரும் இயக்கவில்லை என்று ஆனது.
இதனை தொடர்ந்துதான் “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக தகவல் வெளிவந்தது. இத்தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வெளிவந்ததால் ரசிகர்கள் குஷி ஆனார்கள்.
“புதிய கீதை” திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், “நல்ல வேளை அட்லீ தளபதி 68 படத்தை இயக்கவில்லை. தயாரிப்பாளர் தப்பித்துவிட்டார். வெங்கட் பிரபு மிக சிறப்பான இயக்குனர். மிகவும் சுறுசுறுப்பான இயக்குனரும் கூட” என்று கூறியுள்ளார்.
அட்லீ மீது எப்போதும் ஒரு புகார் உண்டு. அதாவது குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் படத்தை முடிக்கமாட்டார் எனவும் தயாரிப்பாளருக்கு அதிக செலவை இழுத்துவிட்டுவிடுவார் என்ற புகார்தான் அது. இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் கே.ராஜன் அவ்வாறு கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் அரசியல் பேசாமல் இருக்க இதுதான் காரணம்! பயமுறுத்திட்டாங்க.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்…