கொடிக்கட்டி பறந்த தயாரிப்பாளர்!... கதையை நம்பாமல் வேறு ஐடியாவை பிடிக்க காணாமல் போன பரிதாபம்…

Producer: பொதுவாக சினிமாவில் திறமை இல்லாமல் வந்து ஆசைக்காக செய்தால் அது பெரிய பிரச்னையை கொடுக்கும் என்பதற்கு முக்கிய சான்று தான் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் கதை. அப்படி அவர் நினைத்த ஒரே ஆசையால் நிறுவனமே படு பாதாளத்துக்கு போன கதை தான்.

கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம்ஸின் நிறுவனர். கேரளாவை சேர்ந்தவர். தமிழ் படங்களை வாங்கிக்கொண்டு போய் கேரளாவில் ரிலீஸ் செய்யும் விநியோஸ்தராக தன்னுடைய கேரியரை தொடங்கினார். முதல் படமாக வசந்தகாலம் படத்தினை தயாரிக்கிறார். சுமார் வசூல் கிடைக்க அந்த குழுவை வைத்து சூரியன் படத்தினை தயாரிக்கிறார்.

இதையும் படிங்க: எல்லா படத்திலையும் செஞ்சாச்சு… இதுலையா மிஸ் பண்ணுவாரு.. விஜயின் பக்கா ப்ளான்!.

படம் சூப்பர்டூப்பர் ஹிட். அங்கு தான் அவரும் லைம்லைட்டுக்கு வருகிறார். எல்லாரும் யாருடா இவர் என திரும்பி பார்க்கிறார்கள். அதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜென்டில்மேன் திரைப்படத்தினை தயாரிக்கிறார். கமலின் குரு படத்தினை ஒத்தாகவே அப்படமும் அமைந்து இருந்தது.

அந்த படமும் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதையடுத்து காதலன் படத்தினை தயாரித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம். இப்படம் நல்ல ரீச் கொடுக்க பிரம்மாண்ட ட்ரெண்டில் சிக்கினார். பெரிய செட்டை போடுவது அதை வெடிக்க வைப்பது என செய்து கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க: திடீரென நடந்த விபத்து!.. அதையும் தாண்டி சாதித்து காட்டிய ஜனகராஜ்!.. எல்லாமே ஹிட்டு!…

இதனால் படங்கள் குறைய தொடங்கியது. கதையை நம்பி எடுத்தவர். அப்போது ஜொலித்தார். ஆனால் தேவையே இல்லாமல் பிரம்மாண்டம் ஐடியாவில் சிக்க மொத்தமாக அழிந்தார். அதை தொடர்ந்து தன்னுடைய மகனை வைத்து ஒரு படம் தயாரிக்க நினைத்த நிலையில் அப்படம் ரிலீஸாகவே இல்லை. தற்போது ஜென்டில்மேன் இரண்டாம் பாகத்தினை தயாரிப்பதாக அறிவித்து இருக்கிறார்.

கதைக்காவே நம்பி வாழ்ந்தால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும். காதல்தேசம் திரைப்படத்தினை ஒரு கல்லூரியில் எடுத்து இருக்கலாம். ஆனால் அதற்கு பெரிய அளவில் அப்போதே செட் போட்டார். இப்படி எல்லா படங்களை பிரம்மாண்டமாகவே எடுக்க அதில் பல தோல்வியை தழுவி காணாமலே போய்விட்டார்.

இதையும் படிங்க: அஜித் கூட அப்படி இல்லை… இதை செய்யாதீங்க.. கங்கை அமரனை லாக் செய்த விஜய்!… சந்தோஷம்டா யப்பா!

 

Related Articles

Next Story