அஜித் மீது முதன்முதலில் குற்றச்சாட்டு வைத்தவர் இவராகத்தான் இருக்கும்… அப்படி என்ன பண்ணார் தெரியுமா?
சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அஜித்தை குறித்து எப்போதும் பெருமையாகத்தான் பேசுவார்கள். அதாவது அஜித் யாருக்கும் தெரியாமல் உதவி செய்தார், அஜித் ஒரு குழந்தை மனம் கொண்டவர் போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் முதன்முதலாக அஜித்தின் மீது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
செவன்த் சேன்னல் புரொடக்சன்ஸ் நிறுவனரான தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், “சீனு”, “வேட்டையாடு விளையாடு” போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இதனிடையே கடந்த 1996 ஆம் ஆண்டு அஜித்குமார் இவரை சந்தித்து, “எனது தாய், தந்தை ஆகியோரை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்போகிறேன். ஆதலால் இப்போது ஒரு 6 லட்சம் கொடுங்கள். பின்னாளில் உங்கள் பட நிறுவனத்தில் ஒரு படம் நடித்து கொடுக்கிறேன். அந்த பணத்தை பேலன்ஸ் செய்துகொள்ளுங்கள்” என கூறியிருக்கிறார். உடனே மாணிக்கம் நாராயணனும் பணம் கொடுத்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து “அவள் வருவாளா” திரைப்படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரிப்பதாக இருந்திருக்கிறது. அப்போது அஜித்திற்கு 12 லட்ச ரூபாய் தந்திருக்கிறார். ஆனால் அஜித்தோ, “உங்களுக்கு நான் வேறு ஒரு படம் நடித்துக்கொடுக்கிறேன்” என கூறியிருக்கிறார். அதன் பின் அஜித்தை அவரால் தொடர்புகொள்ளவே முடியவில்லையாம்.
அதனை தொடர்ந்து மாணிக்கம் நாராயணன், ஒரு பத்திரிக்கையில் அஜித் தன்னிடம் பணம் வாங்கிவிட்டு எந்த பதிலும் சொல்லவில்லை என பேட்டியளித்திருக்கிறார். இது குறித்து ஊடகங்கள் அஜித் தரப்பிடம் கேட்டபோது “பணம் கொடுத்தது கடவுளுக்குத்தான் தெரியும்” என பதில் வந்ததாம். அதன் பின் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தும் கூட தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். இவ்வாறு அந்த பேட்டியில் மாணிக்கம் நாராயணன் அஜித் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: பல வருடங்கள் தலைமறைவாக இருந்த விசித்ரா… ரஜினி படத்தால் மீண்டும் வந்த வெளிச்சம்…