4 கோடி மோசடி! அஜித்தை தொடர்ந்து ரம்பாவையும் வம்பில் மாட்டிவிட்ட தயாரிப்பாளர்
சமீபகாலமாக வேட்டையாடு விளையாடு பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தொடர்ந்து சினிமாவைப் பற்றியும் சினிமா பிரபலங்கள் பற்றியும் மாறி மாறி புகார்களை கூறிவருகிறார். நடிகர் அஜித் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டார் என்றும் அதை திருப்பி கேட்கும் போது என்னை இழுத்தடித்தார்கள் என்றும் கூறினார். 1997 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் பெரிய பூதாகரமாக மாறியுள்ளது.
அஜித்தை தகாத வார்த்தைகளால் கொத்தும் மாணிக்கம் நாராயணன்
மேலும் இந்த சம்பவத்தால் அஜித்தை தகாத வார்த்தைகளால் வெளிப்படையாகவும் மீடியாக்களில் பேசிவருகிறார் மாணிக்கம் நாராயணன். அவன் பெரிய நடிகனா இருந்துட்டு போகட்டும், வயசாகுதுல, அதற்கேற்ற மெச்சூரிட்டி இருக்கனும்ல என்றும் அஜித்தை கேள்விகளால் துளைத்துக் கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் அவன் வாழ்கிற வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா? பயந்து கொண்டுதான் உள்ளேயே இருக்கிறார். வெளியே வர சொல்லுங்க, வரமுடியாது என்றும் அஜித்தை பற்றி மேலும் மேலும் தன்னுடைய ஆதங்கத்தை கூறிவருகிறார்.
இதையும் படிங்க : ஹீரோவுக்கு அழ வரலைனா பளார்னு அறைஞ்சுடுவார்!.. பாரதிராஜாவிற்கே புத்தி புகட்டிய இயக்குனர்!..
அதே போல் நேற்று அளித்த பேட்டியில் கூட என்னைப் போல் அஜித்தை பற்றி நிறைய பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்றும் ஆனால் அவர்கள் வெளியில் வந்து பேசப் பயப்படுகிறார்கள் என்றும் அவர்கள் ரசிகர்கள் ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தால் தான் அஜித்தை பற்றி தயங்குகிறார்கள் என்றும் கூறினார்.
மேலும் தான் செய்த ஒரே தவறு பணம் கொடுக்கும் போது எந்த ஒரு அக்ரிமெண்டும் போட்டு கொடுக்கவில்லை, அதுதான் தன்னுடைய தவறு என்று கூறியிருக்கிறார். ஆனால் நிறைய பேரிடம் இப்படி அக்ரிமெண்ட் போடாமல் பணம் கொடுத்திருப்பதாகவும் அதில் பாதி பணம் வந்து விட்டது என்றும் மீதி பணம் இன்னும் வராமல் இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க : இன்று வரை தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடாத ரஜினி!.. அட கொடுமையே!.. இதுதான் காரணமா!..
ரம்பா மீதும் புகார்
மேலும் நடிகை ரம்பாவை பற்றியும் ஒரு புகாரை கொடுத்தார். ரம்பா நடித்த 3 ரோஸஸ் படத்தின் சமயத்தில் ரம்பாவிற்கு 4 கோடி பணம் கொடுத்திருந்தாராம் மாணிக்கம் நாராயணன். ஆனால் அதை திருப்பி கேட்டதற்கு ரம்பாவின் சகோதரர் சண்டைக்கு வந்தாராம். அதன் பின் சமரசம் செய்து 3.50 கோடி தருவதாக அவரது சகோதரர் கூறினாராம்.
ஆனால் அந்த 3.50 கோடி பணத்தையும் இதுவரை தரவில்லையாம். இதனால் மாணிக்கம் நாராயணன் நீதிமன்றத்தை நாடினாராம். ரம்பா மீது 8 கேஸ் போட்டாராம். ஆனாலும் கடைசியில் தான் தான் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் கூறினாராம். ஆனால் இது அக்ரிமெண்ட் போட்டு தான் கொடுத்தேன், இருந்தாலும் இதிலும் ஏமாந்து விட்டேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : பாவனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யோகிபாபு!.. 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு பிளாஷ்பேக்!..