தயாரிப்பாளரை ஊசிமுனை மேல் நிற்க வைத்த பாலா!.. ‘நான் கடவுள்’ படப்பிடிப்பில் தன் வில்லத்தனத்தை காட்டிய சம்பவம்..
தமிழ் சினிமாவில் தெனாவட்டான இயக்குனர் என்றால் அது பாலா தான். தன்னிடம் பணிபுரியும் நடிகர்கள், டெக்னீசியன்கள் என பார்க்காமல் மரியாதை குறைவாகவே நடத்தக் கூடியவர் என்று ஏகப்பட்ட புகார்கள் அவர் மேல் வந்துள்ளன. ஆனால் கதையை எடுப்பதில் பாலா மாதிரி ஒரு இயக்குனர் இல்லை என்று சொல்லுமளவிற்கு திரைக்கதை வசனம் அமைப்பதில் சிறந்தவர் பாலா.
அவரின் எல்லா படங்களை பார்த்தாலே தெரியும். ஒவ்வொரு படத்திற்கு பின்னாடி அவரின் கடின உழைப்பு இருந்தாலும் ஸ்கீரினில் தெரிவது எப்படி நடிகர்களை பாடாய் படுத்தியிருக்கிறார் என்று தான். அந்த அளவுக்கு படத்தின் நாயகர்களை புரட்டி எடுத்திருப்பார். அவரின் படத்தில் நடித்த நடிகர்கள் பல அவர்களின் கெரியரில் கண்டிப்பாக பாலா படம் முக்கியமான இடத்தை பிடித்திருக்கும்.
இதையும் படிங்க : ஹீரோ அடிச்சாதானே கைத்தட்டுவாங்க… ஆனா இங்க என்ன உல்டாவா நடக்குது?? ரஜினி படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கதாசிரியர்…
விக்ரமுக்கு எப்படி சேதுவோம் சூர்யாவுக்கு எப்படி நந்தாவோ அதே போல நடிகர் ஆர்யாவுக்கு ‘ நான் கடவுள்’ திரைப்படம். முதலில் இந்தப் படத்தை அஜித்தை வைத்து தான் திட்டமிட்டிருக்கிறார்கள். அக்ரிமெண்ட் எல்லாம் முடிந்த நிலையில் 12.50 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் உட்பட அனைவரும் சம்மதிக்க படத்தை நடக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அஜித் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் ஆர்யா இந்தப் படத்திற்குள் வந்தார். ஆர்யா ஹீரோ என்றதும் படத்தின் பட்ஜெட் 5.50 கோடியாக குறைந்திருக்கிறது. படத்தை 21 நாள்களின் முடிக்கிறேன் என்று சொல்லி 50 நாள்களுக்கு மேலாக இழுத்தடித்திருக்கிறார். காசியில் சூட்டிங் என படக்குழுவை அழைத்துக் கொண்டு போயிருக்கிறார் பாலா.
இதையும் படிங்க : ‘அன்பே வா’ படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட கொடுமை!.. கண்கூடாக பார்த்த எம்ஜிஆர்.. செட்டில் நடந்த உணர்ச்சிகரமான சம்பவம்..
சரியாக 21 வது நாளில் ஆர்யா தேனப்பனுக்கு போன் செய்து சார் இன்றைக்கு தான் என்னுடைய முதல் நாள் ஷார்ட் என்று சொன்னதும் தயாரிப்பாளருக்கு ஒரே ஷாக். 21 நாளில் முடிக்கிறேனு சொல்லிட்டு 21 வது நாளில் இருந்து தான் ஆர்யாவின் ஷார்ட்டையே ஆரம்பித்திருக்கிறார்.
அதன் மூலம் பணமும் செலவாக தேனப்பன் இங்கு தெரிந்தவர்களிடம் லட்சம் லட்சமாக கடனை வாங்கி பாலாவிற்கு அனுப்பி விடுவாராம். இப்படியே போக தேனப்பன் கவுன்சிலில் புகார் அளித்துள்ளார் பாலா மீது. சீக்கிரம் முடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இத்தனை நாள்கள் இழுத்தடிக்கிறார். இதற்கு மேல் என்னால் பணம் ஏற்பாடு செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார்.
ஆனால் தயாரிப்பாளர் நினைத்தது ‘ஒன்னு என் பட்ஜெட்டுக்குள்ள படம் எடுக்கனும் இல்லைனா பாலா படமே எடுக்கக் கூடாதுனு நினைச்சுதான் புகார் செய்திருக்கிறார். ஆனால் கூட இருந்த இன்னொரு தயாரிப்பாளரோ 7.50 கோடி தருகிறேன் என்று சொன்னதும் பாலா அவரே பணம் தருகிறார், உனக்கு என்ன ? ’என்று தெனாவட்டாக பதில் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தேனப்பனுக்கு செட்டில் பண்ண வேண்டிய பணத்தை கொடுத்து மீதி படத்தை எடுத்திருக்கின்றனர். இந்த தகவலை தயாரிப்பாளர் தேனப்பன் ஒரு பேட்டியில் கூறினார்.