விஜய் சேதுபதி பெரிய தத்துவ ஞானி மாதிரி பேசுவாரு… தயாரிப்பாளரின் இந்த மோதல் வித்தியாசமா இருக்கே!

by sankaran v |   ( Updated:2025-05-07 04:44:32  )
vijay sethupathi
X

vijay sethupathi

Vijay Sethupathi: நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிகர் விஜய்சேதுபதியுடனான தனது அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தைப் பொருத்த வரைக்கும் கதைதான் ஹீரோ. படம் பார்த்து முடிச்சிட்டு வெளியே வரும்போது கதைதான் நிக்கும். ஆனா என்னாச்சு மாடுலேஷன்ல சேதுவோட மூஞ்சிய மறக்க முடியல. இந்த ஆளு எங்கேயோ போவான். பெரிய ஆளா வருவான்னு எனக்கு மனசுல பட்டது.

நான் அவரைக் கூப்பிட்டு சொல்றேன். நானும் அவரும் படம் பார்க்குறோம். நீ பெரிய நடிகனா வருவேன்னு சொன்னேன். ஆரம்பகாலகட்டத்துல பைக்ல வருவாரு. அப்பவே ரொம்ப தெளிவான ஆளு. தத்துவ ஞானி மாதிரிதான் பேசுவாரு. சேதுவோட பர்ஸ்ட் படத்துல சேர்ந்து நடிச்சிருக்கேன். ஆனா அன்னைக்கு இருந்ததுல கொஞ்சம் கூட கேரக்டர்ல வித்தியாசம் இல்லை. அதனாலதான் இந்த அளவு வளர்ச்சி. அவரும் நானும் 5 படங்கள் பண்ணிருக்கோம். அவருக்கும் எனக்கும் உள்ள பாண்டே தனி.

எனக்கும் அவருக்கும் மோதல்னு ஒரு விஷயம் பரவுனது. அது என்னன்னா ஒரு வருஷம், 2 வருஷம்னு வெயிட் பண்றேன். 'வசந்தகுமாரன்'னு ஒரு படம். நல்ல படம். தயாரிக்கிறேன். சேதுவுக்கும் அது ரொம்ப பிடிக்கும். அதை வச்சித்தான் ஆரம்பிச்சேன். ஒரு சைடு அவரு படத்தை டிஸ்ட்ரிபியூட் பண்ணிக்கிட்டே இருக்கேன். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூதுகவ்வும் பண்றேன். ஹிட்டாகுது. ஆனா எனக்கு ஆசை. 'டக்'குன்னு ஒரு படம் எடுத்துடணும்னு. கம்ப்ளைண்ட் பண்றேன்.

RK.Suresh and Vijay Sethupathi

கவுன்சில் போகுது. இப்படித்தான் போகுதே தவிர நானும் அவரும் பேசிக்கிட்டுத்தான் இருக்கோம். எங்க பார்த்தாலும் 'மாமன், மச்சான்'னு பேசிக்கிட்டுத்தான் இருப்போம். ஆனா வெளிஉலகத்துல அப்படி மோதல்னு பரவுது. ஆனா ரிலேஷன்ஷிப்பா எந்த இடத்துலயும் என்னை அவரு தவறா சொன்னதுல்ல. நானும் அவரை சொன்னது கிடையாது. இப்ப இருக்குற அந்த மனமுதிர்ச்சி அப்ப இல்ல. தர்மதுரை எடுக்கும்போது நான் எடுத்த விதம் அவருக்கு ரொம்ப பிடிச்சது. திரும்ப ஒரு படம் சேர்ந்து எடுப்போம்னு கேட்டதுக்கு 'சரி பண்றேன்'னாரு. என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்.

Next Story