காசு கொடுத்தாதான் வருவேன்!.. யோகிபாபு மீது குவியும் புகார்கள்!.. இட்ஸ் ராங் புரோ!...

yogi babu
Ypgibabu: தமிழ்த்திரை உலகில் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவை நடிகர்கள் எக்கச்சக்கமாக இருந்தார்கள். செந்தில், கவுண்டமணி, எஸ்எஸ்.சந்திரன், தாமு, வையாபுரி, மனோபாலா, வடிவேலு, விவேக், சந்தானம் என்று வந்து கொண்டே இருந்தார்கள். அதன்பிறகு நகைச்சுவை நாயகர்கள் ஹீரோக்களாக மாறினார்கள். அதனால் படத்தில் காமெடிக்குப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது வந்தவர் தான் யோகிபாபு. அதன்பிறகு ரெடின் கிங்ஸ்லி. யோகிபாபுவைப் பொருத்தவரை ஏன் இவ்வளவு காமெடி செய்தும் எதுவும் மனதில் நிற்கவில்லை என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது.
அவரைப் படத்தில் பார்க்கும்போதுதான் நமக்கு சிரிப்பு வருமே தவிர, அந்த சிரிப்பை மற்றவர்களிடம் சொல்ல முடியாது. அவரது முக அமைப்பும், அந்த அடர்ந்த தலைமுடியும்தான் அவருக்கு பிளஸ். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று கஜானா. இந்தப் படத் தயாரிப்பாளர் யோகிபாபுவைப் பற்றி காட்டமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது. விஷயம் இதுதான்.
கஜானா என்ற ஒரு ஃபேன்டஸி, அட்வென்சர் படத்தை தயாரிப்பாளர் ராஜா எடுத்துள்ளார். இந்தப் படத்தில் இனிகோ பிரபாகர் ஹீரோ. வேதிகா ஹீரோயின். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பியாண்ட், சென்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் புரொமோஷன் அதாவது இசை மற்றும், டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்துள்ளது. இந்த விழாவில் யோகிபாபு கலந்து கொள்ளவில்லை.

கஜானா படத் தயாரிப்பாளர் ராஜா, யோகிபாபு பட புரொமோஷனுக்கு ஏன் வரலன்னு போட்டு கிழி கிழின்னு கிழிச்சித் தொங்க விட்டுட்டார். அப்படி என்னென்ன பேசுனாருன்னு பாருங்க.
யோகிபாபு வந்துட்டாரா? இல்லையா? 7 லட்ச ரூபாய் கொடுத்திருந்தா வந்திருப்பாரு. ஒரு நடிகனுக்கு ஒரு படம் ஒரு குழந்தை மாதிரி. குழந்தையை வளர்க்க முடியலன்னா கேவலம். ஒரு புரொமோஷனுக்குக் கூட வர முடியலன்னா நீங்க எல்லாம் நடிகனாக இருக்கவே லாய்க்கி இல்ல…ன்னு கஜானா பட தயாரிப்பாளர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கஜானா படத்துக்கு முன்பே யோகிபாபு மேல் பல படங்களுக்கு இதுபோன்ற புகார்கள் வந்ததாம். யோகிபாபு பட புரொமோஷன்களில் கலந்துக்க மாட்டார் என்றும் அதற்கு என தனியாகக் காசு கேட்பார் என்றும் அவர் மேல் சர்ச்சை இருந்து வருகிறது. அந்த வகையில் கஜானா பட தயாரிப்பாளர் ஓப்பனாக சொல்லி விட்டார். இதற்கு யோகிபாபு என்ன பதில் சொல்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
யோகிபாபு மற்றும் வேதிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் கஜானா. இந்தப் படத்தின் புரொமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கத்தில் உருவான இந்த சாகசத் திரைப்படம் 700 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட தமிழ் பேரரசர் கஜானாவைத் தேடும் கதை. இது இளைஞர்களின் பயணம், திகில், காமெடி என பல சிறப்பம்சங்களுடன் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் அழிந்து போன யாளி என்ற உயிரினத்தையும் எடுத்துள்ளார்களாம்.