புடிச்சா புளியங்கொம்புதானா? இட்லி கடைக்கு என்ன பிரச்சனை? தனுஷ் செய்வது நியாயமா?

idlikadai, dhanush
தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். ஆக்ஷன், சென்டிமென்ட், குடும்பப்பாங்கான படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏப்ரல் 10ல் திரைக்கு வருவதாக இருந்த இந்தப் படம் இப்போது அக்டோபர் வரை தள்ளிப் போய் விட்டது. இப்போது இட்லிகடைக்கு பிரச்சனை என்கிறார்கள். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி என்ன சொல்றாருன்னு பாருங்க.
தனுஷ் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட சூப்பர்ஹிட் படங்கள் என்றால் அது வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், பொல்லாதவன். ஃபைவ் ஸ்டார் கதிரேசன்தான் இந்தப் படங்களை எல்லாம் தயாரித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மீண்டும் தனுஷை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். அதற்காக 3 கோடி ரூபாய் கொடுத்தாராம்.
ஆனால் தனுஷோ இப்போ உள்ள அவரது பிசினஸ் 100 கோடி வரை வளர்ந்துள்ளதால் படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டாராம். அதே நேரம் வெற்றிமாறனைக் கொண்டு வந்தால் நடிக்கிறேன் என்றும் சொன்னாராம். அந்த வகையில் தயாரிப்பாளர் கதிரேசன் தனுஷூக்கு ரெட் கார்டு போடணும் என்று சொல்லி விட்டார்.
கடைசியில் 8 கோடி வரை தர்றேன். நடிச்சிக் கொடுங்கன்னு தனுஷிடம் சொல்ல முடியாது. உங்களோட 3 கோடியை வட்டியோடு சேர்த்து 6 கோடியா தர்றேன்னு தனுஷ் சொல்ல பஞ்சாயத்து வளர்ந்தது. கடைசி வரை கதிரேசன் அதற்கு சம்மதிக்கவில்லையாம். கடைசியில் நாசர் உள்பட பலரும் சேர்ந்து 8 கோடி வரை வாங்கித் தருகிறோம் என கதிரேசனிடம் சொல்ல, அவரோ முடியாது. 16 கோடி தந்தால் பிரச்சனையை முடிக்கிறேன்னு திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
இந்தப் பிரச்சனையில் தனுஷூம் பிடிகொடுக்காமல் இருக்கிறார். அவர் வெற்றிமாறன் இயக்குவதாக வந்தால் தான் நான் படத்தில் நடிப்பேன். ஆனால் கதிரேசனோ தனக்கு பணமே வேணாம். படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுங்கன்னும் பிடிச்ச பிடியாக நிற்கிறார். அதே நேரம் என்னோட மார்க்கெட் இப்ப ரொம்ப பெரிசு. நான் உங்க பேனர்ல எல்லாம் நடிக்க முடியாதுன்னு தனுஷ் சொல்ல யாரு பக்கம் சரின்னே சொல்ல முடியல என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.