நான் விஜயின் தீவிர ரசிகன்! ‘கோட்’ படத்தில் நடிக்க vpயிடம் சண்டை போட்ட பிரபலம்

by Rohini |
Goat
X

Goat

Vijay: எப்படியாவது விஜயுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இருந்ததாகவும் விஜயின் இதற்கு முந்தைய படத்திலேயே நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அது கோட் படத்தில் தான் நிறைவேறி இருக்கிறது என்றும் ஒரு பிரபல தயாரிப்பாளர் கூறிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நாளை மறுநாள் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் கோட் படத்தை பற்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் கடந்த ஒரு வார காலமாக படத்தைப் பற்றி பெரிய ஹைப் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: சும்மா சிக்குன்னு இருக்கு பொண்ணு!.. வேறலெவல் லுக்கில் வெறியேத்தும் ரம்யா…

அதற்கு காரணம் சில தினங்களாக வெங்கட் பிரபு பிரேம்ஜி வைபவ் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கொடுத்த பேட்டிகள் தான் காரணம். அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும் படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் டி சிவா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. விஜயகாந்தின் ஒரு சில படங்களை தயாரித்தவர் டி சிவா. விஜயகாந்த் மீது அதிக அன்பு உள்ளவர். அதே சமயம் விஜய் மீது இவருக்கு ஒரு தனி மரியாதையே இருக்கிறது.

இதையும் படிங்க: இங்க இருந்துகிட்டு கேரளாவில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்! பெருசா சம்பவம் இருக்கு

சொல்லப்போனால் விஜய்யின் தீவிர ரசிகன் நான் என டி சிவா கூறியிருக்கிறார். விஜயின் இதற்கு முந்தைய படமான லியோ திரைப்படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் அது நடைபெறவில்லை. அதனால் கோட் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என வெங்கட் பிரபுவிடம் சண்டை போட்டு ஒரு சின்ன காட்சியிலாவது நான் நடிக்க வேண்டும் என கேட்டு இதில் நடித்திருக்கிறாராம் டி சிவா.

siva 1

siva 1

வெங்கட் பிரபுவும் டி சிவாவும் நெருங்கி பழகும் அளவுக்கு நண்பர்களாம் .அதனால் அந்த உரிமையில் வெங்கட் பிரபுவிடம் சண்டை போட்டு இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என கூறி இருக்கிறார் டி சிவா. அவரும் கோட் படத்தை பற்றி கூறும்போது நீங்கள் எதிர்பாராத சர்ப்ரைசையும் தாண்டி சில சர்ப்ரைஸ்கள் சஸ்பென்ஸ்கள் எல்லாம் படத்தில் இருக்கின்றன. யாருமே அதை எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள் என கூறி இருக்கிறார் டி சிவா.

இதையும் படிங்க: தோனி கேமியோலாம் இல்ல… ஆனா வேற ஒன்னு இருக்கு… வெளிப்படையா உடைச்சிட்டாரே வெங்கட் பிரபு…

Next Story