நைட்ல கூலிங் கிளாஸ் போடும் நடிகர், நடிகைகள்… அலர்ஜியில இவ்ளோ வெரைட்டியா?

shreya, vadivelu, sadha
தமிழ்த்திரை உலகில் மார்க்கெட் இருந்தால் நடிகைகள் எப்படி இருப்பாங்க? இழந்தால் நடிகைகளின் நிலைமை என்னன்னு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். அது ரொம்பவே கலகலப்பாக இருக்கிறது. என்ன சொல்றாருன்னு பாருங்க.
விஜய், அஜித்துக்கு 34 வருஷம் இருக்காங்க. சிம்பு, தனுஷ் கிட்டத்தட்ட 25 வருஷமா இருக்காங்க. இது ஹீரோக்கு ஜாஸ்தியா இருக்கும். ஹீரோயினுக்கு கம்மியா இருக்கும். நடிகைகளோட மார்க்கெட்ல பல பேர் மாறுவாங்க. அவங்க கேரக்டர் உச்சத்துலன்னா நாலஞ்சு வருஷம்தான் இருப்பாங்க. அதுக்குள்ள அவங்க கல்லா கட்டிடணும். திரிஷா, நயன்தாரா, ராதிகா மாதிரி யாராவது ஒருத்தங்க தான் நீண்ட காலமா இருப்பாங்க. அது ரொம்ப லக். அப்படி அமைஞ்சாலும் ஹீரோயினா தொடர முடியாது. வேற வேற பரிமாணங்கள்ல நடிக்க ஆரம்பிப்பாங்க. சரண்யா பொன்வண்ணன் எல்லா நடிகருக்கும் அம்மா கேரக்டர்.
சிவாஜி படத்துல ரஜினிக்கு ஸ்ரேயா ஜோடி, 'வாஜி வாஜி'ன்னு டூயட் பாடி ஆடுனாங்க. அவங்களே மார்க்கெட் போன பிறகு வடிவேலுக்கு ஜோடியா ஆடுறாங்க. அதே மாதிரி விக்ரமுக்கு 'கண்ணும் கண்ணும் நோக்கியா'ன்னு ஆடுன சதா வடிவேலுக்கு ஜோடியா நடிக்கிறாங்க. எல்லாத்துக்கும் மார்க்கெட் போனதுதான் காரணம்.

நைட் டைம்ல கூலிங்கிளாஸ் போட்டுருக்குறது வடிவேலு தான். அவர் மாரக்கெட் இழந்த காமெடி ஆக்டர். மிஷ்கின் தூங்கும்போது கூட கூலிங்கிளாஸ் போட்டுருப்பாரு. அது கண்ணு பிரச்சனைன்னு பாலாஜி பிரபு சொல்றார். அப்போது ஆங்கர் நான் கேட்க வந்தது கொட்டுற பனியில ஏன்டா கூலிங்கிளாஸ் போட்டுருக்கறன்னு என் பிரண்டு கேட்கற மாதிரி நடிகைகள் சிலர் போட்டுருப்பாங்க.
வெயிலே அடிக்காது. நைட் ஏழு மணிக்குக் குடை பிடிப்பாங்க. எதுக்கு குடைபிடிக்கிறாங்கன்னு எதுவுமே தெரியாது. புதுவகையான அலர்ஜி எல்லாம் அவங்களுக்குத்தான் வரும். ஸ்கின் அலர்ஜி, டஸ்ட் அலர்ஜி, வாட்டர் அலர்ஜி, காத்து அலர்ஜின்னு எல்லாமே அலர்ஜியா இருக்கும்னு நான் கேள்விப்பட்டுருக்கேன் என்று ஆங்கர் சொன்னதும் பார்த்தாலே புரொடியூசருக்கு அலர்ஜியா ஆகிடும். என்ன கேட்கப் போறாங்களோன்னு தெரியாது அவருக்கு என்று பதிலக்குக் கலாய்க்கிறார் பாலாஜி பிரபு.