Heros: ஹீரோக்கள் பெரியளவில் தங்களுடைய வருமானத்தை மட்டும் பார்க்கும்போது சில ஹீரோக்கள் தயாரிப்பாளர் நிலையையும் சரியாக கணிப்பதை பார்க்க முடிகிறது குறித்து பிரபல விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது தமிழ் சினிமா மிக மோசமான நிலைக்கு வந்து இருக்கிறது. இந்த வருடம் தொடங்கியதில் இருந்து ஒரு படம் கூட சரியாகவே இல்லை. வாரா வாரம் படத்தினை ரிலீஸ் செய்கின்றனர். எதை நம்பி புரோடியூசர் அந்த நடிகரிடம் போகிறார்கள்.
இதையும் படிங்க: அஜித், விஜயை விட்டு கார்த்திக்கிடம் போனதுதான் பெரிய தப்பு! புலம்பும் தயாரிப்பாளர்
மொழியே தெரியலைனா ரசிகர்கள் போய் பார்க்கின்றனர். அப்படி ஒரு படத்தினை தமிழ் சினிமா எடுக்க தவறுகிறது. சத்யராஜிடம் பேசும்போது ஏன் இப்படி தொடர்ந்து நடித்து கொண்டே இருக்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர் நான் இப்போ ஹீரோவாக நடித்தால் யார் பார்ப்பார்கள். ரிட்டயர்ட்மெண்ட் ஆகிவிட்டேன்.
அதுக்கு பென்ஷன் போன்று தான் இந்த படங்களில் நடித்து வருகிறேன் என்றார். அதனால் மற்றவர்களை பார்க்காமல் தங்கள் சுயலாபத்துக்காகவே நடிக்கிறார்கள். ஒருமுறை சினிமாவில் இருந்து ஃபீல்ட் அவுட் ஹீரோக்கள் குறித்து ஒரு ஆர்டிக்கிள் எழுத வேண்டிய நிலை.
அவரை பார்க்க பூந்தமல்லி ஹோட்டலுக்கு சென்றேன். கவலையாக உட்கார்ந்து இருந்தார். ஆர்டிக்கிள் டைட்டில் குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். சில நடிகர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இவர் வாங்க என்றார். அங்கு ஹோட்டலில் ஒருவர் கையில் பெட்டியுடன் வந்து இருந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் போட்ட பிச்சைலதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்… இப்படி சொன்ன பிரபலம் யார் தெரியுமா?…
நீங்க சென்றுவிடுங்கள் என்கிறார். தன்னுடைய மொத்த மார்க்கெட் போனாலும் வந்த வாய்ப்பை பயன்படுத்தி இருப்பவரையும் காலி செய்ய நினைக்காமல் வெளியேற்றினார். அவர் தான் நடிகர் அப்பாஸ். ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் கிடைக்கும் கேப்பையெல்லாம் பயன்படுத்தி கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…