Connect with us

Cinema History

பிரபல தயாரிப்பாளர்களும்… வெளுத்துக் கட்டும் வாரிசுகளும் நடித்த படங்கள் – ஒரு பார்வை

தமிழ் நடிகர்களில் சிலர் நல்ல பின்புலத்தை உடையவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு அவரது வாரிசுகளின் படங்கள் சக்கை போடு போடும். தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பாயுமாம். இவர்கள் சீக்கிரத்தில் நல்ல டெவலப் ஆகி முன்னணி நடிகர்களில் ஒருவராகின்றனர். இவர்களில் ஒரு சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

சிவாஜி புரொடக்ஷன்ஸ்

சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைத் தற்போது ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் கவனித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் சிவாஜி கணேசன். புதிய பறவை,

வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம், வெற்றிவிழா, ராஜகுமாரன்,மன்னன், கலைஞன், சந்திமுகி, அசல் உள்பட பலவெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளது. இவரது மகன் விக்ரம்பிரபு. தற்போது முன்னணி நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார். இவர் நடித்த கும்கி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சூப்பர் குட் பிலிம்ஸ்

Nattamai

ஆர்.பி.சவுத்ரி பிரபல தயாரிப்பாளர். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். புது வசந்தம், துள்ளாத மனமும் துள்ளும், ஜில்லா, சூர்யவம்சம், நாட்டாமை போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். இவரது மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா. இருவரும் திரையுலகில் தான் உள்ளனர். ஜீவா நடித்த பல படங்கள் வெற்றிவாகை சூடியுள்ளன. குறிப்பாக கோ, முகமூடி படங்களைச் சொல்லலாம்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். இவர் டூரிங் டாக்கீஸ், வெளுத்து கட்டு, ஆதி, சுக்ரன், நெஞ்சினிலே ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். இவரது மகன் விஜய். இவரது படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். முன்னணி நடிகர்.

தற்போது வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ள வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் இப்போதே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வருவதற்குள்ளே ரஞ்சிதமே…பாடல் மெகா ஹிட்டாகியுள்ளது.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். இவர் ரெட் ஜெயன்ட் மூவீஸ் என்ற நிறுவத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு, விண்ணைத் தாண்டி வருவாயா, மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, அரண்மனை 3, பீஸ்ட், டான், கோப்ரா, விக்ரம், திருச்சிற்றம்பலம், இந்தியன் 2 வரை எல்லாமே சூப்பர்ஹிட் படங்களாகத் தான் தயாரித்துள்ளன. தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினும் பல படங்களில் நடித்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ்

Kalagathalaivan

சமீபத்தில் கூட கலகத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். நண்பேன்டா, மனிதன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். அரசியலிலும் வெற்றிவாகை சூடி தற்போது எம்எல்ஏ.வாக உள்ளார். அது தவிர திமுகவின் இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளார்.

தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா. இவர் பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளார். படங்களை இயக்கியுள்ளார். அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது தமிழக பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

இவரது மகன்கள் செல்வராகவன், தனுஷ். செல்வராகவன் இயக்குனரானார். தனுஷ் முன்னணி நடிகரானார்.

3

கஸ்தூரி ராஜா தயாரிப்பில் வெளியான படங்கள் நாட்டுப்புறப்பாட்டு, 3, டிரீம்ஸ், என் ராசாவின் மனசிலே, வீரம் வெளஞ்ச மண்ணு, எட்டுப்படி ராசா, வீரத்தாலாட்டு ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

இவரது மகன்களின் தனுஷ் தற்போது தமிழ், இந்தி என பல படங்களில் சக்கை போடு போட்டு வருகிறார். வடசென்னை, போக்கிரி, அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவரும் தயாரிப்பாளர் தான். இவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top