Nayanthara: குழந்தைகளுடன் சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா!… தாறுமாறாக எகிறும் செலவு?… புலம்பும் தயாரிப்பாளர்!…

Published on: November 9, 2024
---Advertisement---

சூட்டிங் ஸ்பாட்டில் மகன்களை அழைத்துச் செல்வதால் தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட செலவாக பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கின்றார்.

லேடிஸ் சூப்பர் ஸ்டார்: தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நயன்தாரா தமிழில் ஐயா என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட மொழிகளிலும் பிரபல நடிகையாக வளம் வந்தார்.

இதையும் படிங்க: Vidamuarchi: விடாமுயற்சி படம் இவ்வளவு லேட்டானதுக்கு இதுதான் காரணமா?!… பிரபலம் சொன்ன சுவாரஸ்யம்!…

திருமணம்: நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த நான்கு மாதங்களிலேயே வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நடிகை நயன்தாரா.

திருமணத்திற்கு பின் நடிப்பு: திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் குறைய சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவார் என்று கூறிவந்த நிலையில் அதையெல்லாம் உடைத்து திருமணத்திற்கு பிறகும் சிறந்த நடிகையாக வலம் வந்தார். ஹிந்தியில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டு கொடுக்க ஹிந்தியிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றார். இவர் தமிழில் கடைசியாக அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவரின் 75 வது திரைப்படம் ஆகும்.

பிசியான அம்மா: என்னதான் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் தனது குழந்தைகள் வளர்ப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடும் நயன்தாரா இது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவார். தற்போது தமிழில் மண்ணாங்கட்டி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட் என்ற திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். அது மட்டுமில்லாமல் நடிகை நயன்தாரா சொந்தமாக பிசினஸும் செய்து வருகின்றார். சினிமா பிசினஸ் மற்றும் குழந்தைகளுக்கு அம்மா என அனைத்திலும் பெஸ்டாக இருந்து வருகின்றார் நடிகை நயன்தாரா.

இதையும் படிங்க: Vijay Tvk: விஜயை பத்தி யாருக்கும் தெரியாது!. சின்ன வயசுல இருந்தே!.. ஹைப் ஏத்தும் ஷோபா!..

தயாரிப்பாளர் புலம்பல்: குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வரும் நடிகை நயன்தாரா மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டுகளை வைப்பதாக பிரபல யூட்யூபர் அந்தணன் தெரிவித்து இருக்கின்றார். அவர் தனது பேட்டியில் கூறியிருந்ததாவது ‘நடிகை நயன்தாரா ஷூட்டிங் சென்றாலும் குழந்தைகளை அழைத்து வருவதாகவும், அவர்களை கவனித்துக் கொள்வதற்கு இரண்டு ஆயாக்களையும் படத்தின் செட்டுக்கு அழைத்து வருகிறாராம்.

அவர்களுக்கான சம்பளத்தையும் தயாரிப்பாளர் தான் வழங்க வேண்டும் என்று நிர்பந்திக்கின்றாராம். இதெல்லாம் நியாயமா? நயன்தாராவின் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு தயாரிப்பாளர்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும். ஆயாக்களை அழைத்து வந்தால் அவர்களுக்கு நயன்தாரா தான் சம்பளம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளரை கொடுக்க சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும்’ என்று தயாரிப்பாளர் புலம்புவதாக  கூறி இருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.