மீண்டும் சிக்கிக்கிட்ட சிம்பு... ஒருத்தரும் நம்பல!... கம்பேக் கொடுத்தும் பிரயோஜனம் இல்லாம போயிடுச்சே...!
எந்த தயாரிப்பாளரும் சிம்புவை வைத்து படம் தயாரிக்க முன்வராத காரணத்தால் தான் சிம்பு இப்படத்தை தானே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்தவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. ஆனால் அண்மை காலமாக தொடர்ந்து சறுக்களை சந்தித்து வந்தார் சிம்பு . ரெக்கார்ட் பிரச்சனை, காதல் சர்ச்சை, படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருப்பது, உடல் எடை கூடியதால் சரியாக நடிக்க முடியாமல் போனது என்று பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டிருந்தார்.
இதை பார்த்த பலரும் அவ்வளவுதான் சிம்புவின் சினிமா கெரியர் முடிந்துவிட்டது என்று பலவிதமாக பேசி வந்தார்கள். அதையெல்லாம் தவிடு பொடியாக்கி மீண்டும் கம்பேக் கொடுத்தார் சிம்பு. கடகடவென தனது உடல் எடையை குறைத்து மாநாடு என்ற திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தின் மூலமாக சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார்.
மாநாடு திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல கம்பேக்காக இருந்தாலும் அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் சுமாரான அளவுக்கு தான் வெற்றியை கொடுத்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஓரளவுக்கு நல்ல படமாக அமைந்திருந்தாலும் அடுத்ததாக வெளியான பத்து தல சொல்லும் அளவிற்கு இல்லை. இதைத் தொடர்ந்து அவர் கமிட்டான திரைப்படம் தான் எஸ்டிஆர் 48.
இந்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாகவும், இதனை கமலஹாசனின் ராஜ் கமல் படம் ஃபேக்டரி தயாரிக்கப் போவதாகவும் கூறி வந்தார்கள். ஆனால் தற்போது சாட்டிலைட் டிஜிட்டல் உரிமம் பிரச்சினை காரணமாக இப்படத்தை தயாரிக்க முடியாது என்று கமலஹாசன் கூறிவிட்டாராம். அதற்குக் காரணம் சிம்பு தான் என்று கூறி வருகிறார்கள்.
ஏனென்றால் இவரின் கடைசி இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவு சோபிக்காத காரணத்தால் இவரை நம்பி எப்படி படத்தை தயாரிப்பது என்று தயாரிப்பாளர்கள் பலரும் ஒதுங்கி விட்டார்களாம். நடிகர் சிம்பு கம்பேக் கொடுத்த நிலையிலும் தயாரிப்பாளர்கள் யாரும் இவரை நம்புவதற்கு தயாராக இல்லை. இதனால் வேறு வழி இல்லாமல் சிம்பு இந்த படத்தை தானே தயாரிக்க முன் வந்திருக்கின்றார்.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் பட்ஜெட் 250 கோடி, சிம்புவை வைத்து 250 கோடி முதலீடு செய்து படத்தை எடுத்து அது ஓடவில்லை என்றால் என்ன செய்வது. இதுவே தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற நடிகர்களை வைத்து இந்த பட்ஜெட்டில் படம் எடுத்தால் எப்படியும் படம் திரையரங்குகளில் ஓடிவிடும். ஆனால் சிம்புவை வைத்து எடுப்பதுதான் பல தயாரிப்பாளர்களுக்கும் தயக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால்தான் சிம்பு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கின்றார் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.