டைட்டில் வேணா மிஸ்ஸாகி இருக்கலாம்… சொத்துல சூப்பர்ஸ்டார் தான்… ஷாக் கொடுக்கும் திரிஷா…

by Akhilan |
டைட்டில் வேணா மிஸ்ஸாகி இருக்கலாம்… சொத்துல சூப்பர்ஸ்டார் தான்… ஷாக் கொடுக்கும் திரிஷா…
X

Trisha: நடிகை திரிஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக இருக்கும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு பெருவாரியாக உயர்ந்து இருக்கிறதாம். அந்த வகையில் அவரின் சொத்துமதிப்பு குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றவர் நடிகை திரிஷா. அந்த வருடத்திலேயே ஜோடி திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து இருப்பார். தொடர்ச்சியாக அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்தது. மௌனம் பேசியதே திரைப்படத்தில் அவர் நாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.

இதையும் படிங்க: முதல்ல ரெண்டுனீங்க.. இப்போ மூணா? ‘கோட்’ படம் பற்றி புதிய அப்டேட்! படமுழுக்க விஜய்தானா?

திரிஷா நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கினார். உச்சத்தில் இருந்த அவர் கேரியர் திடீரென சறுக்கியது. இதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டரின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வெற்றிகரமாக ஆடிவரும் த்ரிஷா தற்போது நடித்தி வரும் தக்லைஃப் திரைப்படத்திற்கு 5 கோடி வரை சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல், நிறைய விளம்பரங்களில் மாடலாக இருக்கும் நடிகை திரிஷாவிற்கு மாத வருமானமாக 60 லட்சம் ரூபாய் வரை விளம்பரங்களில் இருந்து கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆறு கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் ஒரு பங்களாவை வைத்திருக்கும் நடிகை திரிஷா தன் தாய் மற்றும் பாட்டியுடன் அதில் குடியிருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் திரைப்படம் இரண்டாவது முறை தான்… இதுக்கு முன்னரே அந்த படத்திலும் விஜய் இதை செஞ்சிருக்கார்…

ரியல் எஸ்டேட்டில் பெரிய ஆர்வம் இருக்கும் நடிகை திரிஷா நிறைய இடங்களில் முதலீடு செய்திருக்கிறாராம். நடிகை திரிஷாவிடம் 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ், 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், மற்றும் 40 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் என மூன்று கார் வைத்திருக்கிறார்.

மொத்த சொத்துமதிப்பாக 85 கோடி ரூபாய் திரிஷாவிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது தக் லைஃப், சீரஞ்சிவியுடன் விஸ்வம்பரா, அஜித்துடன் விடாமுயற்சி என பிஸியாக இருக்கும் திரிஷா விரைவில் தன்னுடைய சொத்துமதிப்பில் கணிசமாக உயர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story