ஒரு ஹீரோவுக்கு இப்படி ஒரு விபரீத ஆசையா.?! இது வேணாம் என எச்சரிக்கும் திரையுலகம்.!

சினிமாவில் ஒருவர் தனக்கு பிடித்த ஒரு துறையை தேடி சினிமாவுக்கு வருவார். ஆனால், சினிமா அவருக்குள் இருக்கும் இன்னோர் திறமையை கண்டுகொண்டு அவரை வேறு மாதிரியாக மாற்றிவிடும். அப்படி தான் நடிக்க வந்த ஷங்கர் இயக்குநரானார். நடிக்க வந்த எஸ்.ஜே.சூர்யா முதலில் இயக்கி அதன் பிறகு நடிகராக மாறினார்.
அப்படி தான் தற்போது தமிழ், மலையாளத்தில் நல்ல ஹீரோவாக இருக்கிறார் பிருதிவிராஜ். இவர் மலையாளத்தில் முன்னணி ஹீரோவாவர். இருந்தாலும், தனது ஆஸ்தான ஹீரோவான மோகன்லாலை வைத்து லூசிபர் எனும் திரைப்படத்தை முதன் முதலாக இயக்கி பிளாக் பஸ்டர் இயக்குனராக மாறினார்.
அதன் பிறகு, மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டேடி எனும் திரைப்படத்தை இயக்கி மீண்டும் தான் ஒரு வெற்றி பட இயக்குனர் என்பதை காண்பித்துவிட்டார். மேலும் பிரிதிவிராஜ் நடிப்பில் அண்மையில் வெளியான ஜனகனமன திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதே போல, அடுத்து அவர் நடிப்பில் கொடுவா, ஆடு ஜீவிதம் ஆகிய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு இருக்கின்றன.
இதையும் படியுங்களேன் - மீண்டும் ஷூட்டிங் கிளம்பிய லோகேஷ் – கமல்.! விக்ரம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்.?
இந்த நிலையில், இயக்குனர் நடிகர் பிருத்திவிராஜூக்கு இவர் ஆசை வந்துள்ளது. அதாவது , நாம் தான் நல்ல ஹிட் கொடுத்துள்ளோமே, அதனால் ஒரு 3டி திரைப்படம் எடுத்தால் என்ன அதுதான் எனது ஆசை என அதற்கான வேளைகளில் இறங்கி விட்டாராம். இதனை அறிந்த திரையுலகினர் இது கொஞ்சம் விபரீத ஆசை என கூறிவருகின்றனர்.
ஏனென்றால் லூசிபர், ப்ரோ டேடி திரைப்படங்கள் கதைக்களங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டவை. 3டி திரைப்படம் என்பது டெக்னீகளாகவும், கதைக்களமாகவும் சிறப்பாக அமைந்தால் மட்டுமே அது சாத்தியம். அதற்கு இன்னும் பயிற்சி எடுத்து, சில படங்கள் இயக்கினால் தான் அனுபவம் வரும் என கூறி வருகின்றனர்.