நடிகர் விஜயின் வளர்ச்சிக்கு பலரும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தியது, அவரின் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி விஜயையும், அவரின் ரசிகர்களை அரசியல்படுத்தியது எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.
அதேபோல் விஜயிடம் 30 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தவர் அவரின் மேனேஜராக இருந்த பிடி செல்வகுமார். இவரின் தயாரிப்பில் விஜய் புலி என்கிற திரைப்படத்திலும் நடித்தார். அந்த படம் வெளிவந்தபோது வருமானத்துறை சோதானையிலும் செல்லக்குமார் சிக்கினார். அப்போது விஜய் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என செய்திகள் வெளியாகின.
சமீபத்தில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் பிடி செல்வகுமார். மேலும் அப்போதே அவர் விஜயை பற்றி பரபரப்பான புகார்களை கூறினார். விஜய்க்காக உழைத்த பலரும் இப்போது அவரிடம் இல்லை. அவர் அப்பா எஸ்.ஏ.சந்திரசேக்ரை ஒதுக்கினார். என்னையும் ஒதுக்கினார். இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பேசி இருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளிடம் பேசிய பிடி செல்வகுமார் மீண்டும் பல புகார்களை அடுக்கினார்.

எஸ்.ஏ.சி இல்லாமல் விஜயின் வளர்ச்சி கிடையாது. ஆனால் அவர் அதை மறந்துவிட்டார். நானும் அவருடன் தான் இருந்தேன். ரசிகர் மன்ற தலைவர் ஜெய்ஸ்ரீதரன், மாநில ரசிகர் மன்ற செயலாளர் ரவி ராஜன் என எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டனர். புலி படத்தை தயாரித்து எனக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட சிலர் காரணமாக இருந்தர்கள். நடிகரென்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். சில்க் ஸ்மிதா வந்தாலே கூட்டம் கூடியது. சினேகா, நமீதா வந்தாலும் அவர்களை பார்க்க ரசிகர்கள் வருவார்கள். அதுவெல்லாம் ஓட்டாக மாறாது.
கிளாமருக்காக சிலர் அவருக்கு ஓட்டு போடலாம் ஆனால் எல்லோரும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று பேசினார். அப்போது ‘விஜய் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? என ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு பதில் சொன்ன செல்வகுமார் ‘அது எனக்கு எப்படி தெரியும்?.. திரிஷாவிடம் கேளுங்க அவருக்கு வேணா தெரியும்’ என்று பதில் சொன்னார்.
