latest news

படம் ஃபிளாப் ஆனதும் ரூமுக்குள் கதறி அழுத விஜய்… பி.டி.செல்வகுமார் கூறிய அந்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி நடிகர்களில் விஜய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. உண்மையை சொல்லபோனால் ரஜினியை விட விஜய் படங்க்ளுக்கான பிசினஸ் என்பது அதிகம்தான். ஆரம்பகாலங்களில் அவ்ர் படட் அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அனைத்து விமர்சனக்களையும் தனது உழைப்பால் உடைத்தெரிந்தவர் விஜய். வ்ஜயின் ஆரம்ப கால கட்டங்களில் விஜய்யுடன் தோளோடு தோள் நின்றவர்களில் ஒருவரான அவரது முன்னாள் மேலாளரும், தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் சமீபத்தில் பகிர்ந்துகொண்ட உருக்கமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1992-ல் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய்க்கு, ஆரம்பகாலம் மலர் படுக்கையாக இல்லை. விஜய்யின் இந்த ஆரம்பகாலப் போராட்டங்களில் அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் பி.டி.செல்வகுமார். ஒரு பி.ஆர்.ஓ-வாக தனது பயணத்தைத் தொடங்கி, விஜய்யின் நீண்டகால மேலாளராக இருந்தவர். விஜய்யின் பல வெற்றிப் படங்களுக்குப் பின்னணியில் இவரது உழைப்பு இருந்தது. ஒரு கட்டத்தில் விஜய்யை வைத்து ‘புலி’ என்ற பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கும் அளவுக்கு இருவருக்குமான நட்பு மிக நெருக்கமாக இருந்தது. குடும்பத்தில் ஒருவராகவே பி.டி.செல்வகுமார் இருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பி.டி.செல்வகுமார் விஜய் குறித்து பேசுகையில்,

விஜய் சினிமாவில் ரொம்பவும் கஷ்டப்பட்ட காலங்களில் இருந்தே நான் அவர் கூடவே இருந்திருக்கேன். ஆரம்பத்தில் அவர் நடித்து வெளியான ஒரு படம் கடுமையான தோல்வியைத் தழுவியது. அந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத விஜய், ஒரு ரூமுக்குள் பூட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தார். அதனை எஸ்.ஏ.சந்திரசேகர் சார் என்னிடம் கூறினார். உடனே ரூமுக்குள் சென்று விஜய்க்கு ஆறுதல் சொல்லி அவரைத் தேற்றினேன். என்றைக்கும் நாம் கஷ்டப்பட்ட நேரத்தில், நமக்குத் துணையாக கூட இருந்தவர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

பிடி செல்வகுமார் தற்போது திமுகவில் இணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

5 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

7 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

8 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

10 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

13 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 day ago