Connect with us

Cinema History

சினிமாவில் மட்டுமல்ல…நிஜத்திலும் இவர் கேப்டன் தான்…! விஜயகாந்த் ஒரு சகாப்தம்

கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் போனால் போதும். நம்மவர்களின் கேலிக்கு அளவே இல்லை. அவர்களை மீம்ஸ்களுக்கான ஹீரோவாக மாற்றி விடுவர். அந்த வகையில் ஒரு காலத்தில் வெற்றி கொடி நாட்டிய விஜயகாந்த்தும் மீம்ஸ்களில் வருவது தான் ஜீரணிக்க முடியவில்லை. அவர் எப்பேர்ப்பட்டவர் என்று தெரியுமா? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மதுரையில் இருந்து விஜயராஜாக சினிமாவில் நடிக்க சென்னை வந்தவர் தான் விஜயகாந்த். அப்போது பட வாய்ப்புக்காக பல திரைப்படக் கம்பெனிகள் ஏறி இறங்கினார். நிறம் இவருக்கு ஒரே மைனஸ்.

அதனால் பலரும் இவரை நிராகரித்தனர். கைக்கெட்டிய வாய்ப்பும் வாய்க்கு எட்டாமல் போனது. பல போராட்டங்களை சந்தித்தார். அதன் விளைவாக 1979ல் கே.ஏ.காஜா இயக்கத்தில் இனிக்கும் இளமை என்ற படத்தில் அறிமுகமானார்.

ஆரம்பத்தில் இவரது பல படங்கள் தொடர் தோல்வியையே சந்தித்தன. இருந்தாலும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சியை மட்டும் கைவிடவில்லை. அதன் பலனாக 1981ல் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் இவருக்குக் கிடைத்தது. சக்கை போடு போட்டு பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. விஜயகாந்த்துக்கு ஒரு திருப்புமுனையைத் தந்தது.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் இந்தப்படம் வெளியானது.

80களில் ரஜினி, கமல் என்று இரு ஜாம்பவான்கள் தான் தமிழ்த்திரை உலகில் இளைஞர்களை வசீகரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி ரசிகர் பட்டாளத்தை சுண்டி இழுத்தவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

ரஜினி, கமல் இருவரும் பெரிய பெரிய இயக்குனர்களின் படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் கேப்டனோ இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுத்தார். அதே நேரம் அவரது படமோ தொடர் வெற்றியைத் தந்தது. இதனால் சிறு தயாரிப்பாளர்களின் வசூல் சக்கரவர்த்தியானார் விஜயகாந்த்.

1984ல் இவர் 18 படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமாவின் முதல் 3 டி படத்தில் நடித்தவரும் இவர் தான். அது என்ன படம் தெரியுமா? அன்னை பூமி.

போலீஸ் என்றால் காக்கி டவுசருடன் திரிந்த கதாபாத்திரத்திற்கு மத்தியில் மிடுக்கான தோற்றத்துடன் நிஜ போலீசே தோற்கும் வகையில் விரைப்பாக நடித்து அசத்தினார் விஜயகாந்த்.

Police Vijayakanth

இந்த வேடம் ரஜினி, கமலுக்குக் கூட அந்த அளவு பொருந்தியிருக்காது. ஆனால் விஜயகாந்த்துக்கு கனகச்சிதமாகப் பொருந்தியது என்றே சொல்ல வேண்டும்.

சேதுபதி ஐபிஎஸ், கேப்டன் பிரபாகரன், சத்ரியன், ஊழை விழிகள், மாநகர காவல் என்ற படங்களைப் பார்த்தால் இந்த உண்மை உங்களுக்கு புரியும்.

சாதாரணமாக படத்தில் நடிகர்கள் எல்லாம் கொடுத்த வசனத்தை அப்படியே மனப்பாடம் செய்து பேசுவார்கள். ஆனால் இவர் அப்படி அல்ல. அதற்கு உயிர் கொடுத்து கம்பீரமாக பேசுவார். இவரது தமிழ் உச்சரிப்பு புரட்சிகரமாக இருக்கும். இவர் பேசும்போது கேட்கும் நமக்கு உடம்பெல்லாம் முறுக்கேறும். ஒரு கம்பீரம் நமக்குள்ளும் வந்துவிடும்.

இதன் காரணமாகத் தான் இவரை ரசிகர்கள் புரட்சிக்கலைஞர் என்று பட்டம் கொடுத்து அன்புடன் அழைத்தனர். அதே போல் சண்டைக்காட்சிகளில் லெப்ட் கால், ரைட் காலால் எட்டி உதைத்து சுவரில் ஏறி பின்னிப் பெடல் எடுத்து விடுவார்.

Senthoora pandi

தனக்கு ஒரு திருப்புமுனை வாய்ப்பைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்பதால் அவரது மகன் விஜய் நடிக்க அவருடன் இணைந்து செந்தூரப்பாண்டி என்ற படத்தில் நடித்து அசத்தினார். படமும் மெகா ஹிட்டானது. அதே போல பெரியண்ணா படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார்.

பாக்யராஜூக்கும் உதவும் வகையில் அவருடன் இணைந்து சொக்கத்தங்கம் என்ற படத்தில் நடித்து வெற்றிப்படமாகக் கொடுத்தார். அப்போது தோல்வியைத் தழுவி வந்த இயக்குனர் சுந்தரராஜனுடன் இணைந்து என் ஆசை மச்சான் என்ற படத்தைக் கொடுத்தார்.

இவரால் திரையுலகில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் என பலர் அறிமுகமாகி யிருக்கிறார்கள். சின்னக்கவுண்டர் படத்தில் கவுண்டமணியிடம் வாதாடி வைகைப்புயல் வடிவேலு வுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளை வாங்கிய இவர் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

தான் ஒரு கேப்டன் என்பதை படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் நிரூபித்தார். அப்போது நடிகர் சங்கம் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்த போது நடிகர்களை எல்லாம் இணைத்து வெளிநாடுகளில் கலைவிழா நடத்தி கடனை அடைத்தார்.

அதே போல பேரிடர் காலங்களிலும் தன் உதவிக்கரங்களை மறக்காமல் நீட்டுவார்.

அரசியலில் இறங்கியதும் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தர். ஏனென்றால் இவர் கொடுப்பதற்கென்றே பிறந்தவர். வெள்ளம் வரும் காலங்களில் மக்களின் இன்னல்களை நேரடியாகச் சென்று பார்த்து அவர்களின் துயர் துடைத்தார்.

captan Vijayakanth

நடிகர் விஜயகாந்த் படப்பிடிப்பில் இருந்தாலும் சரி. அலுவலகத்தில் இருந்தாலும் சரி. இங்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு தவறாமல் வழங்கப்படும்.

இதற்காகவே இவருக்கு 2001ல் சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது கிடைத்தது. சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் இருபெரும் கட்சிகளைத் தொடர்ந்து 3வது பெரிய கட்சி தனது தேமுதிக என்ற பெயர் எடுத்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top