Pushpa2: மாற்றப்பட்ட புஷ்பா2 இசையமைப்பாளர்… ட்ரெண்ட்டான ஆளுதான்… வைப் பண்ணிடுவாரு!..

by Akhilan |
pushpa2
X

pushpa2

Pushpa2: தென்னிந்தியா திரைப்படமான புஷ்பா 2 திரைப்படத்தில் புதிய இசையமைப்பாளர் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை தரும். அத்தகைய திரைப்படங்களுக்கு ஃபேன் இந்தியா அந்தஸ்தும் கிடைக்கும். அந்த வகையில் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது புஷ்பா 2.

இதையும் படிங்க: சூர்யா படங்களின் தொடர்தோல்விக்கு என்ன காரணம்..? பிரபலம் சொல்வதைக் கேளுங்க…

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்திற்கு கிடைத்த சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது எல்லா மொழி ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

முதல் பாகத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தின் பாடல்கள் தான். அப்பாடலை இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். ஆனால் தற்போது தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட முதல் காரணமாக அவர் தான் இசையமைத்துக் கொண்டிருந்த புஷ்பா 2 மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் கசிந்தது.

இதனால் புஷ்பா2 திரைப்படத்தில் தற்போது இன்னொரு இசையமைப்பாளர் உள்ளே வர இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. ஏற்கனவே தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களை இசையமைத்து முடித்து விட்டார். இதனால் பின்னணி இசைக்காக மட்டும் இன்னொரு இசையமைப்பாளர் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனக்கும் இந்த உறவுதான்… கொந்தளித்த மோகினி டே…

samcs

samcs

இதன் மூலம் புஷ்பா 2 திரைப்படத்தின் பின்னணி இசைக்கு சாம் சிஎஸ் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்து வந்த இவர் தற்போது புஷ்பா2 படத்தில் இணைந்திருப்பதால் மேலும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா2 திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story