Cinema News
ரிலீசுக்கு முன்பே 1000 கோடி!.. அட்வான்ஸ் புக்கிங்கிலும் வசூலை அள்ளும் புஷ்பா 2!…
Pushpa 2: பாகுபலி படத்திற்கு பின் தெலுங்கில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. இதை பேன் இண்டியா படம் என சொல்கிறார்கள். பல மொழிகளிலும் வெளியாவதால் இது போன்ற படங்கள் வசூலை அள்ளுகிறது.
ரஜினியின் ஜெயிலர் படம் 600 கோடி வசூலை அள்ளியது. கேஜிஎப், கேஜிஎப் 2 போன்ற படங்களும் பல நூறு கோடிகளை அள்ளியது. பிரபாஸின் எல்லா படங்களும் பேன் இண்டியா படங்களாகவே வெளியாகி வருகிறது. கடைசியாக வெளியான கல்கி படமும் சூப்பர் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: எரிகிற நெருப்புல எண்ணெயை ஊத்தறதுக்கு நான் வரல!.. பொங்கி எழுந்த மோகினி டே!..
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். ஆந்திராவில் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இவரின் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பேன் இண்டியா படமாக வெளியாகி வசூலை அள்ளியது. எனவே, இப்போது புஷ்பா 2 உருவாகியிருக்கிறது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சுகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் சுமார் 500 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே ஆயிரம் கோடி வசூலை அள்ளிய முதல் திரைப்படம் என்கிற பெருமையை புஷ்பா 2 பெற்றுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், வட மாநிலங்கள், கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் படத்தை வெளியிட தியேட்டர் உரிமைக்கான தொகை, ஓடிடி மற்றும் டிவி உரிமை ஆகியவைதான் ஆயிரம் கோடி வசூலை தொட்டிருக்கிறது.
படம் வெளியான பின்னர் எவ்வளவு நூறு கோடியை இப்படம் வசூல் செய்யும் என தெரியவில்லை. அதேபோல், அமெரிக்காவில் மிகவும் வேகமாக ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு அட்வான்ஸ் புக்கிங் டிக்கெட்டுகள் விற்பனையான திரைப்படம் என்கிற சாதனையையும் புஷ்பா 2 பெற்றிருக்கிறது. வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ‘அந்த’ நடிகையா இவங்க… லேட்டஸ்ட் வீடியோ பார்த்து ‘ஷாக்கில்’ ரசிகர்கள்! ..