Cinema News
புஷ்பா 2 FDFS!.. ஒரு டிக்கெட் 3000 ரூபாயா?.. இப்படியே போனா 3000 கோடி கலெக்ஷன் வரும் போலயே!..
புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: சீனாவில் கிடைத்த அமோக வரவேற்பு!.. பலே பிளான் போட்ட மகாராஜா படக்குழு..
இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை பார்த்த படக்குழுவினர் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முடிவு செய்திருந்தார்கள். முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனால் இப்படத்தின் ப்ரோமோஷன்களை மிகப்பெரிய அளவில் செய்து வந்தார்கள்.
சென்னை, மும்பை, பாட்னா, ஹைதராபாத் என பல்வேறு இடங்களுக்கு சென்று படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் படத்தின் பிரீ புக்கிங் தொடங்கியிருக்கின்றது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படம் என்பதால் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். நேற்று தெலுங்கானாவில் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியிருந்தது.
படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்களை விறுவிறுப்பாக வாங்கி வருகிறார்கள். முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் ஏறத்தாழ விற்பனையாகி விட்டதாக கூறப்படுகின்றது. மேலும் படக்குழுவினர் தங்களது வெளியீட்டு தேதியில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அதன்படி புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி இரவு 9.30 மணிக்கு தெலுங்கானாவில் வெளியாகின்றது.
இதனால் டிக்கெட்டின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 1200 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையாகி வருவதாகவும், சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் டிக்கெட்டுகளின் விலை 350 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் மும்பையில் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட் விலை 3000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.
இதையும் படிங்க: சத்தமே இல்லாம பூஜைய முடிச்சுட்டீங்க போலயே?… வேற லெவல் லுக்கில் எஸ்.கே-சுதா கொங்கரா..!
இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. டிக்கெட்டின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது பலரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் இன்று தமிழகத்திலும் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீ புக்கிங் தொடங்க இருக்கின்றது. தற்போது தமிழகத்தில் எந்த அளவுக்கு டிக்கெட்டின் விலை உயரப்போகுது என்பது தெரியவில்லை. இப்படியே போனால் படம் 2000 கோடி அல்ல 3000 கோடி ரூபாய் வசூல் செய்தாலும் சொல்வதற்கு இல்லை என்று சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.