250 கோடி வசூலை அள்ளிய ‘புஷ்பா’...மாஸ் காட்டும் அல்லு அர்ஜூன்...

by சிவா |   ( Updated:2021-12-27 14:46:39  )
pushpa
X

தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் பற்றிய வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்‌ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. மேலும், நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு அட்டகாசமான பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியானது. எனவே, இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜூன் பேன் இண்டியா ஹீரோவாக மாறியுள்ளார்.

இப்படம் , முதல் நாளிலேயே அனைத்து மொழிகளிலும் சேர்த்து இப்படம் ரூ. 71 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலேயே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை புஷ்பா பெற்றது.

இந்நிலையில், தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமை என அனைத்தும் சேர்த்து புஷ்பா திரைப்படம் ரூ.250 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. முதல் 3 நாளில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.173 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

pushpa

ஒரு படம் எவ்வளவு வசூல் என்பது எத்தனை தியேட்டர்களில் மற்றும் எத்தனை மொழிகளில் அப்படம் வெளியாகிறது என்பதை பொறுத்துள்ளது. புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பல ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனதால் இந்த வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story