Connect with us
Pushpa2

Cinema News

Pushpa2: அது ஐட்டம் சாங் இல்ல… பின்னால் பெத்த காரணம் இருக்கு.. புஷ்பா2 குறித்து ஸ்ரீலீலா!..

Pushpa2: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா2 படத்தில் ஒற்றை பாடலுக்கு ஆடியதற்கு பின்னால் வலுவான காரணம் என்று இருப்பதாக நடிகை ஸ்ரீலீலா பேசியிருக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: Dhanush: தனுஷ் அராஜகத்தின் தலைவன்.. உன் குடும்பம் தரமான குடும்பமா? ஒரேடியா சாய்ச்சுப்புட்டாரே

புஷ்பா படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பாடல்கள் தான். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் எல்லா பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இருந்தும் நடிகை சமந்தா முதல் முறையாக ஒற்றை பாடலுக்கு ஆடிய ஊ சொல்றியா..  ஊஹும் சொல்றியா மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த பாகத்திலும் ஒற்றைப்பாடல் இருக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீ லீலாவை படக்குழு ஒப்பந்தம் செய்தது.

இதையும் படிங்க: மயில்சாமி ஒரு விஷயம் பண்ணார்!. ஆடிப் போயிட்டேன்!.. ஆர்.ஜே.பாலாஜி சொன்ன செம மேட்டர்!..

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இரண்டாம் பாகத்தின் ஐட்டம் சாங் கிஸ்ஸக் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தற்போது இதுகுறித்து பேசி இருக்கும் ஸ்ரீலீலா, சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்களுக்கே இது என்ன ஐட்டம் சாங் என்ற குழப்பம் இருக்கிறது. ஏன் நான் இதை ஒப்புக்கொண்டேன் எனவும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஏனெனில் எனக்கு இதைப் போன்ற ஒற்றை பாடல் வாய்ப்பு நிறைய வந்தது.

அப்போதெல்லாம் ஒப்புக் கொள்ளாத நான் இந்த பாட்டை ஒப்புக் கொள்ள வலுவான காரணம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்பது டிசம்பர் 5ஆம் தேதி திரைப்படம் வெளியான பின்னர் அனைவருக்கும் தெரியும் எனவும் தெரிவித்திருக்கிறார். டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் புஷ்பா2 படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top