அந்தப் பாடலில் கதாநாயகியை நடிக்க வைக்க படாத பாடுபட்ட பாரதிராஜா... காரணம் இதுதானாம்!..

by sankaran v |
Bharathiraja2
X

Bharathiraja2

பாரதிராஜாவின் இயக்கத்தில் புதிய வார்ப்புகள் படத்தில் பாக்கியராஜ் நடித்து அசத்தியுள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பாடல்கள் எல்லாமே அருமை. இந்தப் படத்தில் பாக்கியராஜிக்குக் குரல் கொடுத்தவர் கங்கை அமரன். ரதி ஜோடியாக நடித்தார். வான் மேகங்களே என்று ஒரு அழகான காதல் பாடல் வரும். மலேசியா வாசுதேவன், ஜானகி சேர்ந்து பாடிய பாடல். இது மோகன ராகத்தில் வரும். இசைஞானி இளையராஜா அருமையாக இந்தப் பாடலுக்கு இசை அமைத்திருப்பார்.

இந்தப் பாடலில் 3 சரணம் வரும். சந்தூர், புல்லாங்குழல், ஸ்ட்ரிங்ஸ், வீணை, நாதஸ்வரம் கருவிகள் கொண்டு அருமையாக இசை அமைத்து இருப்பார். 3வது சரணத்துல நாதஸ்வரம் கூட ஜண்டேவை சேர்த்து அருமையாக வாசித்து இருப்பார்.

Puthiya varpukkal

Puthiya varpukkal

கவியரசர் கண்ணதாசனைப் பொருத்தவரை 10 காதல் பாடல்கள் எழுதினால் ஒரு பாடலில் ராமனை சேர்த்து விடுவார். அப்படித்தான் இந்தப் பாடலையும் எழுதியிருப்பார். வான் மேகங்களே... வாழ்த்துங்கள்... பாடுங்கள். நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை... என்று வரும். அதே போல ஆண் பாடும் போது கடைசியில் சீதையை என்று பாடுவார்.

இந்தப்பாடலில் குயில் கூவுவதைப் போல புல்லாங்குழலில் இசைஞானி அவ்வளவு அழகாக வாசித்து இருப்பார். இந்தப்பாடலில் மலேசியா வாசுதேவன் பாடுகையில், தென்றலே ஆசை கொண்டு தோகையைக் கலந்ததம்மா... தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே... மா... அம்மம்மா... நெஞ்சில் தீபம் ஏற்றும் நேரம் கண்டேன்... வான் மேகங்களே... என இதமாகப் பாடுவார்.

இந்தப்பாடலில் நடித்த ரதி வட இந்தியப்பெண் என்பதால் அவருக்கு தமிழ் தெரியாததால் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாராம். வான் மேகங்களே என்று பாடும்போது ரொம்ப வாயைத்திறந்து விட்டாராம். அதன்பிறகு அந்த லிப் மூவ்மெண்டை சரிபண்ணுவதற்கு பாரதிராஜா ரொம்பவே சிரமப்பட்டாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளரும், யூடியூபருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story