தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழில் ரொமேன்டிக் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். அதன் பின்னர் காதல் திரைப்படங்களாக நடித்து தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிழும் நல்ல நடிகராக வலம் வந்தார்.
தற்போது அவர் முதன் முதலாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். அதனை பிரமாண்டமாக இயக்கி பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கி உள்ளார். ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டுள்ள ராக்கெட்ரி திரைப்படத்தை தான் மாதவன்தனது முதல் திரைப்படமாக இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நம்பி நாரயணனாக நடிகர் மாதவன் தான் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனால், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்கார் நடிகர் இயக்குனர் மாதவன்.
இதையும் படியுங்களேன் – நாய் குட்டிக்கு நான் டிக்கெட் கேட்டேனா.?! கொந்தளித்த தளபதி 66 கதாநாயகி.!
அப்படி ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் மாதவன் பேசுகையில், அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் ஒரு ராக்கெட்டை ஏவுவதற்கு முன்னர் கோள்கள் எங்கு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பஞ்சாங்கத்தையும் உபயோகப்படுத்துவார்கள் என கருத்து பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரின் கருத்தை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். சாக்லேட் பாய் மாதவனிலிருந்து, வாட்ஸாப் அங்கிள் மாதவன் என மாறிவிட்டார் என பல்வேறு காலாய்கள் இணையத்தில் பரவ தொடங்கிவிட்டன.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…