விஜயகாந்தை வேண்டாம் என ஒதுக்கிய ஏவிஎம் நிறுவனம்! - பதிலுக்கு இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா?

by Rohini |
viji
X

viji

தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். 80களில் மிகவும் உச்சத்தில் இருந்த ரஜினி, கமல் இவர்களுக்கே டஃப் கொடுத்த நடிகராக மாறினார் நம்ம கேப்டன். ஒரு சமயத்தில் ரஜினியையும் கமலையும் அஞ்சும் அளவுக்கு மாற்றினார் விஜயகாந்த். அது மட்டும் இல்லாமல் இவரின் உதவி மனப்பான்மை அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.

viji1

viji1

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜயகாந்த் காலப்போக்கில் ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக மாறினார். அவரின் சினிமா வாழ்க்கையில் கேப்டன் பிரபாகரன், சத்ரியன், புலன்விசாரணை , ஊமை விழிகள்போன்ற பல முக்கிய படங்கள் திருப்புமுனையாக அமைந்தன.

இந்த நிலையில் விஜயகாந்தை வைத்து படம் எடுக்க ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் தயங்கி இருக்கிறது. அது ஏவிஎம் நிறுவனம் தான். இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் வைதேகி காத்திருந்தாள். அந்தப் படத்தை முதலில் தயாரிக்க இருந்தது ஏவிஎம் நிறுவனமாம்.

viji2

viji2

ஆனால் சுந்தர்ராஜன் இந்தப் படத்திற்கு விஜயகாந்த் நடித்தால்தான் சரியா வரும் என கூறியிருக்கிறார். ஏவிஎம் விஜய்காந்தை வேண்டாம் என்று சொன்னதற்கு அந்த நேரத்தில் சிவக்குமார் ஒரு வளரும் நடிகராக இருந்திருக்கிறார். அதனால் அவரை வைத்து இந்த படத்தை எடுத்தால் பிசினஸ் அளவில் சரியாகப் போகும் என்ற காரணத்தினால் சிவக்குமாரை ஏவிஎம் சொல்லி இருக்கிறது.

ஆனால் சுந்தர்ராஜன் இந்த கதைக்கு விஜயகாந்த் நடித்தால் மட்டுமே சரியாக வரும் என கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்துக்கு ஏவிஎம் நிறுவனம் ஒத்துப் போகவில்லையாம். அதனால் வைதேகி காத்திருந்தால் படத்தை ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து இருந்து தூயவன் பஞ்சு அருணாச்சலம் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார் சுந்தர்ராஜன். அவர்கள் இருவரும் தான் இந்த படத்தை தயாரித்து வெளியிட்டனர்.

viji3

viji3

Next Story