இப்படி ராவா காட்டி இழுக்கிறியே ராசி கண்ணா!.. ராப்பகலா உன் நினைப்புதான் போ!.. போட்டோஸ் பாருங்க!..

தெலுங்கு படங்களில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தாலும் இப்போது கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வருபவர்தான் ராஷி கண்ணா. டெல்லியை சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறைக்கு போனார். அப்படியே சினிமாவுக்கும் போய்விட்டார்.
தாய்மொழி ஹிந்தி என்றாலும் பாலிவுட்டில் இவரால் நுழைய முடியவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போய் ரவி தேஜாவுக்கெல்லாம் ஜோடியாக நடித்தார். தமிழில், நயன், அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் மூலம் களம் இறங்கி ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்துவிட்டார். இதில் அடங்கமறு, அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகியவை முக்கிய படங்களாகும். சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவுள்ள அரண்மனை 4 படத்திலும் ராஷி கண்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. தி சபர்மதி ரிப்போர்ட் மற்றும் டி.எம்.ஈ என இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதோடு, தெலுங்கில் ஒரு படமும், மேதாவி என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் மேலும் வாய்ப்புகளை பெறுவதற்காக உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ஏனெனில், பாலிவுட்டில் வாய்ப்புகளை பெறுவதற்கு கவர்ச்சியே பெரிய அளவில் உதவும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ராஷி கண்ணா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இருக்கிறது.