More
Categories: Cinema News latest news

குண்டா இருக்கேன்னு சொல்றாங்க!.. ஆன்ட்டின்னு கலாய்க்கிறாங்க!.. ஃபீலிங்ஸ் காட்டும் அபர்ணா

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஜோடியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்தார். ஆனால் அந்த இரு படங்களை விட சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்றும் படத்தில் பொம்மியாக நடித்து தேசிய விருதை வென்றார்.

சூரரைப் போற்று படத்துக்கு பிறகு அபர்ணா பாலம் உடைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் எடை அதிகரித்து விட்டதால் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இதையும் படிங்க: கலைவாணரை சுடுவதற்கு பல நாளாக ஒத்திகை பார்த்த எம்.ஆர்.ராதா! அதிர்ச்சி பின்னணி

ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக வீட்ல விசேஷம் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி அந்த படம் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தின் தனுஷின் தம்பி சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் என நடிக்கத் தெரிந்த நடிகைகள் நடித்துள்ளனர். இந்த மாதம் ஜூலை 28-ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 26 ஆம் தேதி ராயன் திரைப்படம் திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க: ரஜினி, கமல் இணைந்து நடிக்கப் போறாங்களா? அந்த தயாரிப்புன்னா சாத்தியமாம்..!

ராயன் படத்துக்கான புரமோஷனை துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட நடிகர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி எடுத்த அபர்ணா பாலமுரளி உடல் எடை அதிகரித்ததால் சோசியல் மீடியாவில் பலரும் தன்னை பாடி ஷாப்பிங் செய்தார்கள் என்று பேசியுள்ளார்.

இன்டெர்நெட் என்பது தனி உலகம் என்பதை இன்னமும் நான் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே வருகிறேன். நெட்டிசன்களின் வாயை எல்லாம் பூட்டுப் போட முடியாது. ஒரு படத்துக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால் அதிகரிக்க தயாராக உள்ளேன். அதே போல குறைத்து நடிக்க வேண்டும் என்றாலும் அந்த முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். நான் எப்படி இருக்கிறேன் என்பது மற்றவர்களின் கமெண்டுகளை கண்டுகொள்ள தேவையில்லை என அபர்ணா பாலமுரளி பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: கவுண்டமணியோடலாம் எப்படி நடிச்சாங்கன்னே தெரியல!… இப்படி சொல்லிட்டாரே விஜய் சேதுபதி!.

Published by
Saranya M

Recent Posts