ராயன் பாட்டு யுடியூப்பில் செய்த சாதனை!.. விஜய்க்கே டஃப் கொடுக்குறாரே தனுஷ்!...
Raayan: யுடியூப்பில் பல பாடல்கள் பல வியூஸ் பெற்றாலும் இதை துவங்கி வைத்தவர் தனுஷ்தான். அனிருத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடல் இப்போது வரை யுடியூப்பில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட பாடலாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் யுடியூப்பில் பாடல் வீடியோக்களை ரசிகர்கள் அதிகம் பார்க்க துவங்கியதே ஒய் திஸ் கொலவெறி பாடல் வெளியான பின்னர்தான்.
அதாவது, யுடியூப்பில் பாடல்கள் ஹிட் அடித்து அதிகம் பேர் பார்ப்பதை துவங்கி வைத்தவரே தனுஷ்தான். அந்த இடத்தில் சிம்பு இருந்திருக்க வேண்டும். யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து அவர் வீடியோக்களை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், சிம்பு மிஸ் பண்ணியதை தனுஷ் செய்தார்.
அதன்பின் சிம்பு ஒரு பீப் பாடலை வெளியிட்டார். அது சர்ச்சைக்கு உள்ளாகி அவர் காவல் நிலையம் செல்லும் வரை சென்றது. ஒருபக்கம் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்களின் பாடல்கள் யுடியூப்பில் வெளியிடப்பட்டு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
அதிலும் விஜய் தொடர்பான வீடியோக்கள் யுடியூப்பில் அவரின் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. மாஸ்டர் படத்தின் பாடல்கள் யுடியூப்பில் சூப்பர் ஹிட் அடித்தது. டிவிட்டரில் கூட விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தொடர்பான பதிவு அதிக முறை ரீடிவிட் செய்யப்பட்டது.
இதுவரை டிவிட்டரில் அதிகமுறை ரீடிவிட் செய்யப்பட்ட பதிவாக அது இருக்கிறது. அதேநேரம், கோட் படத்தின் 3 பாடல்கள் வெளியாகியும் அந்த பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. மாஸ்டர், பீஸ்ட், வாரிசு பாடல்களை போல கோட் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், தனுஷ் நடித்து இயக்கி வெளியான ராயன் படத்தில் இடம் பெற்ற ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியான 12 நாட்களில் யுடியூப்பில் 25 மில்லியன் அதாவது இரண்டரை கோடி பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இந்த செய்தியை அப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறது.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தின் டிரெய்லரில் காட்டாத முக்கிய பிரபலங்கள்! எங்க கிட்ட இருந்து தப்ப முடியுமா?